வெள்ளி, 14 ஜனவரி, 2022

முன்னாள் முஸ்லீம் தோழர் அனீஸ் ஜாமீனில் விடுதலை!

May be an image of 6 people, people standing, outdoors and text that says 'WARNING'

ரிஷ்வின் இஸ்மத்  : நன்றி அறிவிப்பு! செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.(101 : திருக்குறள்)
இன்று 13-1-2022  மாலை  5மணிக்கு  தோழர் அனீஸ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் அதிகமானோர் பங்களிப்பு உண்டு  முகநூலில் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்றவர்களில்  திரு ஸ்ரீதர் சுப்ரமணியன் அவர்கள்  திரு TVசோமு அவர்கள்  திரு ஷாஜஹான் R  அவர்கள் மற்றும் ஏனைய நட்பு சகோதரர்கள்  முகநூலில் ஆதரவு தந்தார்கள். 

அதில் தானாக முன் வந்து, எங்களுக்கு துணை நின்று, வழக்கை எடுத்து வாதாடிய
வழக்கறிஞர்களில் சீனியர் வழக்கறிஞர் தோழர் பாலமுருகன் அவர்களுக்கு முதற் கண் எங்கள் நன்றிகளும், அவரோட இணைந்து தோள்கொடுத்த, வழக்கறிஞர் தோழர் வெண்மணிஅவர்கள்
வழக்கறிஞர் தோழர் பிரதாப் அவர்கள், வழக்கறிஞர் தோழர் மலரவன் அவர்களுக்கும், 

என்றென்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும், தி. வி. க தோழர் Tamiliniyan Nehrudass அவர்களுக்கும்
ஆயிரமாயிரம் நன்றிகள்.
மற்றும்  தோழர் Vasanthan D  ஆகியோர்களுக்கு  நாங்கள் நன்றி கூற கடமை பட்டிருக்கிறோம் .
மேலும் Exமுஸ்லிம்ஸ் கேரளா ,கேரளா எஸன்ஸ் கிளப், எஸன்ஸ் க்ளோபள், யுக்திவாதிகள் மற்றும் ஊடக வாயிலாக....
[1. Joshua Edison
2. Andrew Sam Raja pandiyan  , Simplicity
3. Shalin Maria Lawrence
4. Dr.Shalini
5. Piyush manush
6. Gladston Ex christian association
7. Bright Singh Johnrose
8. Ex-Muslims of India
9. Atheist House Tamil clubhouse moderators and members
10. Secular Humanists Pakistan
11. International Ex-Muslim Coalition இன்னும் இங்கே பெயர் விடுப்பட்டிருக்கும் அத்துணை நண்பர்களுக்கும், சமூக ஊடக செயற்பாட்டளர்களுக்கும், சமூகத்தின் மீதும் மாற்று சிந்தனைகள் மீதும் நம்பிக்கை கொண்ட உங்கள் அனைவருக்கும்  "நன்றி"  நன்றி. நன்றி என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
🙏🙏🙏🙏
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞானத்தின் மானப் பெரிது.( 102 :திருக்குறள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக