திங்கள், 24 ஜனவரி, 2022

மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!

h

பகத்சிங் -  நக்கீரன் செய்திப்பிரிவு :    அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியின் மகள் லாவண்யா (17). கனிமொழி இறந்துவிட்டதால் முருகானந்தம் சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
லாவண்யா 8 வகுப்பு முதல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிருத்துவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.


தற்போது +2 படிக்கும் நிலையில் கடந்த 9ந் தேதி விடுதியில் இருந்த களைக்கொல்லி விஷத்தை குடித்து வாந்தி எடுத்த நிலையில் மறுநாள் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக 15 ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் தற்கொலைக்கு காரணம் மாணவியை மதம் மாறச் சொல்லி தொல்லை கொடுத்ததே என மாணவியின் வீடியோ பதிவை காட்டி பெற்றோரும், பா.ஜ.க வினரும் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் ஆர்பாட்டம் செய்தனர். ஆனால் 16 ந் தேதி நீதிபதி வாங்கிய மரணவாக்கு மூலத்தில் தன்னை விடுதி காப்பாளர் சகாயமேரி செலவு கணக்குகளை எழுதச் சொல்லி டார்ச்சர் செய்தார், படிக்க விடுவதில்லை, விடுமுறைக்கும் ஊருக்கு அனுப்பவில்லை. அதனால் களைக்கொல்லி மருந்தை குடித்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 வழக்கு விசாரனையை சிபிசிஐடி க்கு மாற்றக் கோரி பெற்றோர் தரப்பு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து சடலத்தை வாங்கி அடக்கம் செய்யவும் இன்று ஞாயிற்றுக் கிழமை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கவும், பெறப்படும் வாக்குமூலம் சீலிடப்பட்ட கவரில் திங்கள் கிழமை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக