ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மைக்கல் பட்டி - கோவை, கன்னியாகுமரியை போல தஞ்சாவூரில் ஒரு மினி உ.பி குஜராத்தை உருவாக்க முடியாது

May be an image of 5 people and text that says 'BREAKING NEWS SUN NEWS UNNEWS Hai ไอ๕สต 7dmtire 専日 கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி! "எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில்தான் படித்தனர்; இதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றுமையாக இருக்கிறோம்" பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்திக்கின்றனர் என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் BREAKING SUNNEWSTAMIL ® SUNNEWS Ο sunnewslive.in NEWS 28JAN2022 2022'

Villavan Ramadoss :  கோவை, கன்னியாகுமரியில் ஒரு மினி உ.பி குஜராத்தை உருவாக்க முடிவதைப்போல இலகுவாக தஞ்சாவூரை மாற்ற முடியாது.
இந்துவாக இரு இந்து கடையிலேயே பொருள் வாங்கு என்று தீவிர பிரச்சாரம் நடந்தது, நான் சிறுவனாக இருந்தபோது. தஞ்சாவூர் மக்கள் அதனை மயிருக்குக்கூட மதிக்கவில்லை.
தஞ்சாவூர் எம்.எல்.ஏவாக பலமுறை போட்டியிட்டவர்/வென்றவர் உபயதுல்லா.   
பெரும்பான்மை மக்கள் இந்துக்கள்தான்.
அவரை முஸ்லீம் என்று அடையாளப்படுத்தியத்தையோ அல்லது பிரச்சாரம் செய்தோ நான் கண்டதில்லை. சொன்னால் என்ன நடக்கும் என்பதற்கு இந்து கடை மேட்டரில் டெமோ காட்டியாகிவிட்டது.


பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதில் பங்கேற்க சென்ற ஒரு குரூப் கும்பகோணம் வந்தது.
அந்த செய்தி வந்தபோது அந்த கும்பலை கன்னா பின்னாவென்று எங்கள் அக்கா கணவர் செல்வம் அவர்கள் திட்டியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. விஷேசம் என்னவென்றால் வீட்டுக்கு அரிசி வாங்க மறந்தாலும் விபூதி வாங்க மறக்காத ஸ்ட்ரிக்ட் இந்து அவர்.
என் சித்திகள் போகும் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி இல்லாமல் இருந்ததே இல்லை. ஒன்றுவிட்ட தங்கைகள் வீட்டு பூஜையறையில் வேளாங்கண்ணி மாதா படம் இருக்கும். பிள்ளையார், வெங்கடாசலபதிக்கு கிடைக்கும் அலங்காரம் குறைவில்லாமல் இவருக்கும் உண்டு.
1999 வாக்கில் துவங்கிய வெறித்தனமான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் எடுபடாத சில பகுதிகளில் தஞ்சை வட்டாரமும் ஒன்று.
(இதனால் எல்லாம் தஞ்சாவூரை குஜராத் ஆக மாற்ற முடியாது என்று இறுமாப்போடு சொல்லவில்லை. கோவை சசிகுமார் சாவுக்கு வேதாரண்யத்தில் இருந்தெல்லாம் ஆள் போனதுதான். இப்போதைய எங்கள் தலைமுறையை அழித்த பிறகு வேண்டுமானால் அது சாத்தியமாகும் என்று தைரியமாக சொல்லலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக