சனி, 15 ஜனவரி, 2022

தி.மு.க அரசு புதிரை வண்ணார் மக்களின் குரலுக்கு செவிமடுக்குமா?

May be an image of 7 people, people standing, people sitting and road

Arumugam Selvi  : தி.மு.க. அரசின் விடியல்  பட்டியல் இனத்தவர்களுக்கு மட்டும் விடியவே மறுக்கிறதே?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தென்மாவட்ட மக்களின் மிகவும் பிரசித்த பெற்ற புனிதமான கோவில்.
குறிப்பாக தென் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கிராமங்களில் இருந்து வந்து தங்கள் பிள்ளைகளுக்கு குலசாமியாக கும்பிட்டு தல முடி எடுத்து பெயர் சூட்டுவது வழக்கம்.
அவ்வாறு திரண்டு வருகிற ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு தலைமுடி இறக்கம் செய்வது பட்டியல் சாதியான புதிரை வண்ணார் மக்கள்,
நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த கோவில் நிர்வாகம் பெயர் அளவிற்கு நான்கைந்து பேரை மட்டுமே முடிஇறக்கம் செய்பவர்களாக பதிவேடுகளை பராமரித்து வருகிறது.

இதனால் தற்போது தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000/ ஊக்க தொகை இந்த தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் ஏமாற்றம் ஆகிவிட்டது.
போராடிய தொழிலாளர்களை சாத்தூர் போலிசார் கைது செய்து சிறைப்படுத்திவிட்டனர். ஆனால் அரசு இவர்களின் நியாமான கோரிக்கையை கேட்கவே இல்லை. இந்துவாகவே வாழ்ந்து இந்துவாகவே தொழில் செய்தாலும் இந்த அரசாங்கத்திற்கு பிராமணனாக இருந்தால்தான் கோரிக்கையை கூட கேட்கும் அவலநிலை. இருந்து வருகிறது.
அர்ச்சகர்களை அழைத்து நிவாரணம் கொடுத்த தி.மு.க முடித்திருத்தும் செய்யும் தொழிலாளர்களை அழைத்து நிவாரணம் கொடுக்கவில்லை. தொழிலாளியாகவே ஏற்கவில்லை. பின்னர் ஊதியம் எங்கே. தி.மு.க அரசு இந்த புதிரை வண்ணார் மக்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்று அவர்களை தொழிலாளர்களாக அங்கிகரித்து நிரந்தரமாக்கி அவர்களையும் அரசு ஊழியர்களாக வாழ செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நன்றி.
கி.ஆறுமுகம் சமூக நீதி. மதுரை.

 May be an image of 1 person and road

May be an image of 1 person and text that says 'தமிழக தமிழக அரசே! இந்து சமய அறநிலையத்துறையே! முடியிறக்கும் பணியாளர்களை நிரந்தரமாக்கு நிரந்தரமாக்கு...'

 May be an image of 1 person and text that says 'தமிழக அரசே! இந்து சமய அறநிலையத்துறையே! முடியிறக்கும் பணியாளர்களுக்கு பணிக்கான ஊதியத்தை முறையே வழங்கிட நடவடிக்கை எடு... டவடிக்கை எடு...'

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக