வெள்ளி, 28 ஜனவரி, 2022

எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்குப் போட்டு தற்கொலை

 maalaimalar :சௌந்தர்யா, சக மருத்துவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது 30) பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சௌந்தர்யா உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவின் மகளான சௌந்தர்யா, பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய பணியாற்றிய சக மருத்துவரை அவர் மணந்தார். அவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சௌந்தர்யா வசித்து வந்தார்.

அவரது மரணம் எடியூரப்பா குடும்பத்தினரையும், மாநில பாஜகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் அறிந்தவுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக