ஞாயிறு, 23 ஜனவரி, 2022

தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார்.

May be an image of 1 person
dinamaolar :முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. 1966 முதல் 1988 வரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசு,பத்ம பூஷண் விருது வழங்கியிருந்தது. இவரது மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 திருக்குறளில் வேதங்களின் கருத்துக்கள்தான் இருக்கிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்ட திரு நாகசாமி இன்று காலமானார்
தொல்லியல் துறையில் எந்த ஒரு வரலாற்று சான்று பொருள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதை முதலில் காஞ்சி சங்கர ஆச்சாரியிடம் கொண்டுபோய் காட்டிவிடுவார் இந்த நாகசாமி என்று கூறப்படுவதுண்டு .
அவர் அது சமஸ்கிருதத்திற்கு பின்பு வந்ததாக இருந்தால் அது உலகுக்கு அறிவிக்கப்படும் .. ஆனால் அதுவே சமஸ்கிருதத்திற்கு முந்தைய தமிழ் அகாழாய்வு பொருளாக இருந்தால் அது மறைக்கப்பட்டுவிடும். யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்லியல் துறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது.


திருக்குறள் என்பது சாஸ்திரங்களின் திரட்டு என்று நாகசாமி எழுதியுள்ளார் . இதற்கு பதில் கூறவேண்டுமா என்ற கேள்வியும் அதற்கு பதிலும்...
இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்கனவே பதில் கூறப்பட்டு தெளிவாக நிருபிக்கப்பட்டவைதான்.
வள்ளுவர் எதிர்த்த வடமொழி சிந்தனை ஓட்டம்!
இப்போது நாம் சொல்வது . திருவள்ளுவர் அந்த காலத்து பெரியார்!
திருவள்ளுவர் சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் தொகுப்பாக அதை செய்யவில்லை . அதை எதிர்த்து கண்டனம் செய்ய திருக்குறளை இயற்றி இருக்கிறார்

இதுதான் எங்கள் தமிழ் மரபு என்றல்ல கண்டித்து கூறியிருக்கிறார் என்பதை நாம் இப்போது எடுத்துரைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்
உங்களுக்கு எதிராக போரடத்தொடங்கிய முதல் நூல் திருக்குறள் .
வரலாறு என்பது போர்களின் நிகழ்சிகளை தொகுத்து கூறுவதல்ல . உண்மையான வரலாறு என்பது சிந்தனை போராட்டங்கள் .
திருக்குறள் எனபது தமிழர்களின் ஒரு அரசியல் சட்டம் போன்றுதான் வரலாற்றை கட்டமைத்து இருக்கிறது என்று கருதவேண்டும்..
ஆரிய பார்ப்பனீய பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து நின்று போராடியிருக்கிறார் ..
பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக கருத்தியல் போரில் திருவள்ளுவர் வெற்றி பெற்றிருக்கிறார்,
எந்த போரிலும் எதிரிகளை அசிங்கப்படுத்துவதுதான் முதலில் நடப்பது.\
திராவிடர்கள் கறுப்பர்கள் அசுரர்கள் மோசமான தோற்றம் உடையவர்கள் , எல்லா தீய குணங்களும் வாய்க்கப்பெற்றவர்கள் .. இந்திரனே உனக்கு சோமபானம் தருகிறேன் இந்த திராவிட கறுப்பர்களின் பயிர்களை எல்லாம் மழை பொழுந்து நாசம் செய்துவிடு என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்களா இல்லையா?
இப்படி திராவிடர்கள் மீது அருவருப்பை உண்டாக்கி இருந்த போதுதான் திருவள்ளுவர் " பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் " என்ன பெரிய அடி?
நாலாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொருட்களில் ஒன்று கூட போர்கருவி இல்லை.
அங்கிருந்த சிற்பம் ஒன்று ..பெரிய எருதின் மிகப்பெரிய கொம்பின் நுனியில் இரு குருவிகள் இருப்பதாக ஒரு முத்திரை . இது எதை கூறுகிறது ?
இதை விட அன்பை போதிப்பதற்கு ஒரு முத்திரை இருக்கிறதா?
இப்போது வாருங்கள் கொல்லாமைக்கு .
வேள்வியும் யாகமும் செய்வது எதற்காக?
இந்திர பதவிக்காக !
சுவர்க்கம் கிடைக்கும் . ஊர்வசியும் ரம்பையும் உங்களை அணைத்து நடனம் ஆடுவார்கள்!
இது வேண்டாம் .. வள்ளுவர் சொல்கிறார் : அவி சொரிந்து ஆயிரம் வேட்டலில் ஒன்றில் உயிர் செரித்து உண்ணாமை நன்று "
வள்ளுவருக்கு சமஸ்கிருதமும் தெரிகிறது .யாகங்களும் தெரிகிறது
இந்திர பதவிவை விட இது எனக்கு பெருசு ஐயா . இப்போது எருதின் கொம்பில் இருந்த குருவி முத்திரை ஞாபகம் வரவில்லையா ?
பார்ப்பனீயத்தை நொறுக்கிய திருக்குறள் ! நாகசாமிக்கு பதிலடி.. வர்ணதர்மத்தை உடைத்த வள்ளுவம் முனைவர் ம. இராசேந்திரன்.. வீடியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக