திங்கள், 31 ஜனவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் நகராட்சி ..

நக்கீரன் செய்திப்பிரிவு  : நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. தேமுதிக, அதிமுக கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில் திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், கும்பகோணம், தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாபநாசம், திருப்பனந்தாள், சுவாமிமலை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கழுகுமலை, கடம்பூர் பேரூராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக