புதன், 5 ஜனவரி, 2022

பிறந்தநாள் காணும் கலைஞர் கனிமொழி வாழ்கவே!

 திருமதி கனிமொழி கருணாநிதி (January 5, 1968)
இவரை ஒரு மாபெரும் தலைவரின் மகளாகவோ ஒரு சீனியர் எம்பியாகவோ.
ஒரு பெரிய கட்சியின் மகளிர் அணி தலைவியாகவோ அந்நியப்படுத்தி பார்க்க எவராலும் முடியாது.
உரிமையோடு ஒரு சகோதரியிடம் பேசுவது போல பேசமுடியும் பழக முடியும்.
எந்த வித அதிகார மமதையும் இவரிடம் கிடையாது .
சாதாரண அரசியல்வாதிகள் காட்டும் எளிமையையும் தாண்டி,
உண்மையும் உணர்வும் இவரிடம் இயல்பாகவே இருக்கிறது.
எந்த மனிதரையும் தன்னவராக கருதும் " யாவரும் கேளீர்" என்ற பண்பு இவரிடம் இருக்கிறது.
பலருக்கும் வாய்க்காத அரிய பண்பு இது .
வாயால் எவரும் யாவரும் கேளீர் என்று உச்சரிக்கலாம்
ஆனால் அதை வாழ்வியல் கோட்பாடாக கொண்டிருப்பது அரிது.
குருவி தலையில் பனங்காய் என்பது போல 2 ஜி வழக்கில் இவரை மாட்டிவிட்டு திகாரில் தள்ளியது சுயநல கூட்டம்.
அந்த சதியை இவர் எதிர்கொண்ட விதம் இவரின் மென்மையான சுபாவத்திற்குள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் மேன்மையை உலகம் கண்டு கொண்டது
வெளிப்பார்வைக்கும்  பேசும் தொனியிலும் மென்மையானவர் போன்று தெரிந்தாலும் உறுதியில் இவர் கலைஞரின் இன்னொரு தோற்றம்தான்
இவரின் உண்மையான செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்திய நாடாளுமன்ற கூட்ட தொடர்களில் நீங்கள் பார்வையாளராக இருக்கவேண்டும்
குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இவரின் வரலாறு இந்திய அளவில் பிரமிக்க தக்கதாக இருக்கும்
சகோதரி கனிமொழி கருணாநிதிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் : "நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என என் எதிரியே தீர்மானிக்கிறான்"
கோலம் என்பது பொதுவாக பெண்களுக்கான ஒரு வித கலாச்சார கலை. ஆனால் பெண்கள் அதிலே தங்கள் மனோநிலையை பிரதிபலிப்பது வழக்கம்! உதாரணமாக வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க கோலம் போடும் போது "நல்வரவு" என எழுதுவார்கள். அதே போல ஹேப்பி கிருஸ்மஸ், ஹேப்பி நியூ இயர், ஈத் முபாரக் என மதம் கடந்தும் கோலமிடுவார்கள். அதே போலத்தான் சென்னை பெசண்ட் நகர் பெண்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தங்கள் கருத்தை கோலம் வழியே வரைந்து விட அடிமை எடப்பாடி அரசு அவர்களை கைது செய்தது இரு ஆண்டுகள் முன்பாக.
காலை 8 மணிக்கு கைது நடக்கின்றது. அன்று காலை 10 மணிக்கு நம் தலைவர் தளபதியாரும், இளந்தலைவர் கலைஞர் கனிமொழி அவர்களும் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும் தனி விமானம் மூலம் ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு செல்ல விமான நிலையம் சென்று விமானத்தில் அமர்ந்த பின்னர் விஷயம் தெரிய வருகின்றது. ஆனால் முழு விபரமும் தெரியாத நிலையில் கலைஞர் கனிமொழி அவர்கள் "கோலம் போடுவதெல்லாம் தேச விரோத செயல் என எனக்கு இப்போது தான் தெரிகின்றது" என டிவிட்  போட்டு விடுகின்றார். தலைவர் தளபதியார் மேலதிக விபரத்தை கட்சி தலைமையை விசாரிக்க சொல்கின்றார். விமானம் கிளம்பி விட்டது.
அதற்குள் விஷயம் தீவிரமாகின்றது. ஜார்கெண்ட் சென்ற பின்னர் விமானநிலையத்தில் முழு விபரம் இவர்களுக்கு அறிய வருகின்றது.
தன் அண்ணனும், கழக தலைவருமான நம் தளபதியாரிடம் ஆலோசித்து தமிழகம் முழுவதும் அந்த சட்டத்தை எதிர்த்து திமுகவினரும், பொதுமக்களும் கோலமிட போராட்ட அழைப்பு விடுக்கின்றார்.
தன் வீட்டின் முன் போராட்ட கோலத்தை வரைய சொல்கின்றார் ஜார்கண்டில் இருந்தபடியே!
அடுத்தநாள் தமிழகம் முழுமையும் கோலப்போராட்டம். அகில இந்தியா முழுமையும் ஆச்சர்யமாக பார்க்கின்றது. இப்படி ஒரு வித்யாசமான போராட்டத்தை அறிவித்தது யார் என இந்தியா தமிழகத்தை வியப்புடன் பார்க்கின்றது. கலைஞரின் மகள் கனிமொழிதான் இந்த கோலப்போராட்டத்தை அறிவித்தது என்கிற செய்தி அறிந்து " ஓ....கலைஞர் மகளா? அப்படியெனில் இது இந்தியாவில் எதிரொலிக்கும்..." என பேசுகின்றனர்.
அடிமை எடப்பாடி அரசும் மோடி அரசும் ஆடிப்போகின்றன!
தலைவர் கலைஞர் வீடு, தலைவர் தளபதியார் வீடு என கோலப்போராட்டம் ஆரம்பித்ததும், தன்னார்வ திமுக இளைஞர்கள் போட்டி, பரிசுகள் என அறிவித்ததும் போராட்டத்தை உச்சிக்கு கொண்டு சென்றன.
ஆக கோலம் என்பதை போராட்ட ஆயுதமாக்கிய கலைஞர் கனிமொழி அவர்கள், கோலம் என்பது பொண்களுக்கு மட்டுமான விஷயம் அல்ல ஆண்களும் போடலாம், மதம் கடந்தும் போடலாம், என பல மரபுகளை உடைத்து சங்கிகள் எந்த கோலம் போட்டால் கைது என சொன்னார்களோ அந்த கோலத்தையே ஆயுதமாக்கியவர் கலைஞர் கனிமொழி!
பிறந்தநாள் காணும் கலைஞர் கனிமொழி வாழ்கவே!
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக