திங்கள், 10 ஜனவரி, 2022

நடிகையின் அலறல் வீடியோவை நடிகர் திலீப் திரும்ப திரும்ப பார்த்து ரசித்தார் - பிரபல இயக்குனர் பகீர் வாக்குமூலம்

 tamil.asianetnews.com : நடிகை கடத்தல் வழக்கு குறித்து இயக்குனர் பாலசந்திரகுமாரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்கு மூலம் அளித்தார்.
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.


நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் நேரடி தொடர்பில் இல்லை என்றாலும், பாலியல் தொல்லை காட்சியை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கும், நடிகர் திலீப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல மலையாள இயக்குனருமான பால சந்திரகுமார் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துகள் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த கருத்துகளின் அடிப்படையில் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க கேரள போலீசாருக்கு கொச்சி கோர்ட்டு அனுமதி அளித்தது. மேலும் இம்மாதம் 20-ம் தேதிக்கு முன்னதாக விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் பாலசந்திரகுமாரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்கு மூலத்தில், நடிகை பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு ஆளான போது பல்சர் சுனிலும் அவரது கூட்டாளிகளும் பதிவு செய்த வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் தன்னிடம் காட்டியதாகவும், அப்போது அதில் பதிவான சத்தம் மிகவும் குறைவாக இருந்தது.

பின்னர் நடிகையின் அலறல் சத்தத்தை அதிகரிக்க, கொச்சியில் உள்ள ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், அந்த அதிகரிக்கப்பட்ட நடிகையின் அலறல் சத்தத்தை நடிகர் திலீப் திரும்ப திரும்ப ரசித்து கேட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் ஆய்வு நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதனால் நடிகை கடத்தல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக