ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நடிகர் வடிவேலு குணமாகி நலமாக வீடு திரும்பினார்

 மின்னம்பலம் : கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் வடிவேலு, தான் நல்ல நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றிக்கான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனயில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 23 அன்றிரவு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு, முழுமையாக குணமடைந்துவிட்டதாக ராமசந்திரா மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து நடிகர் வடிவேலு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,”மக்கள் ஆசீர்வாதத்தால் கொரோனாவிலிருந்து மீண்டு நான் நலமாக உள்ளேன். மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் நலம் விசாரித்தனர். நலம் விசாரித்த மக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.நான் மிகவும் நலமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக