சனி, 29 ஜனவரி, 2022

தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் ..இறுதிவரை ரஜினிக்கு தெரியாமல் மூடி மறைத்த லதா!

ladha-rajinikanth

cinemapettai.com  -Sarath  :  ரஜினிகாந்திற்கு சமீப காலமாக தொடர்ந்து வேதனையில் வந்து கொண்டிருக்கின்றன.  இதனால் ரஜினிகாந்த் தற்போது என்ன செய்வதென தெரியாமல் மன அமைதியைத் தேடி அலைகிறார். இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து வேதனை கொடுக்க கூடிய சம்பவங்கள் தான் காதுக்கு வருகிறது.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரது வாழ்க்கையில் சந்தோசமாக 18 வருடங்கள் சென்றது. மேலும் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்கள் புரிதல் திசைமாறி விவாகரத்து வரை சென்றுள்ளது.
அதாவது சமீபகாலமாக தனுஷ் ஐஸ்வர்யா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில நாட்களாக இருவரும் சண்டை போட்டுள்ளனர். இந்த விஷயம் லதா ரஜினிகாந்துக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இதனை ரஜினிகாந்திடம் கூறியுள்ளார்.



அதற்கு ரஜினிகாந்த் வாழ்க்கை என்றால் பல சண்டைகள் வரத்தான் செய்யும் அதனை சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை என கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த்திடம் ஐஸ்வர்யா பிரிவதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதற்கு ரஜினிகாந்த் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டு இப்போது பிரிந்தால் அது சரியாக இருக்காது அவர்களிடம் சமரசம் பேசி சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.

இதனால் லதா தனுஷிடம் ஐஸ்வர்யாவிடம் பேசி இருந்தால் இது நடந்து இருக்காது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் தற்போது கோபத்தின் உச்சத்திற்கே சென்று ரஜினிகாந்த் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். லதா பேச வந்தாலும் தற்போது பேச விருப்பமில்லை என அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக