வியாழன், 27 ஜனவரி, 2022

மேயர் பதவி முதல் பேரூராட்சி தலைவர் பதவி வரை மறைமுகத் தேர்தல்.. கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

tamil.indianexpress.com : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
திமுக கூட்டணிக் கட்சிகள் ஷாக், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர், மேயர் சேர்மன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல், DMK, cpm, cpi, congress, vck, tamilnadu, urban local body polls
திமுக கூட்டணிக் கட்சிகள், மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடும் வகையில் நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.

மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்பட்டால், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள், மேயர் பதவி கிடைக்காவிட்டாலும் நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகள் கூட்டணியில் கேட்டதைவிட குறைவாக கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், திமுக ஆரம்பத்தில் இருந்தே மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்தான் என்பதில் உறுதியாக இருந்தது.

இதற்கு காரணம், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட்டால், சில இடங்களில் எதிர்க்கட்சி அதிமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளதால், நேரடித் தேர்தலில் திமுக உறுதியாக இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகளின் விருப்பத்துக்கு மாறாக அறிவிக்கபட்டிருப்பது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் ஆக அமைந்துள்ளது. ஏற்கெனவே, 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களையே ஒதுக்கியதால் ஏமாற்றத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் பங்கீட்டில் திமுகவிடம் மேலும் ஏமாற்றங்களையே சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்று திமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக