திங்கள், 10 ஜனவரி, 2022

டாஸ்மாக் பார் ஏலத்தில் செந்தில் பாலாஜியும், சபரீசனும் கூட்டணியா?

aramonline.i- அஜித கேசகம்பளன் :  டாஸ்மாக் பார் ஏல அணுகு முறையால் ஆளும் கட்சிக்குள் கொந்தளிப்பு! முதல்வர் குடும்பத்து செல்லப் பிள்ளையான செந்தில் பாலாஜி மூலம் ஓட்டு மொத்த டாஸ்மாக் பார்களையும் ஒரு சில கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கிறார்களா?
கட்சிக்காரர்களையே காயடிக்கிறார்களா?
ஆளும் கட்சித் தலைமை ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது என்பதற்கு டாஸ்மாக் பார் டெண்டர் விவகார அணுகுமுறையே சாட்சி!.
 கட்சித் தலைமையின் தலைக்குள் கார்ப்பரேட் முதலாளி வந்து உட்கார்ந்து கொண்டுள்ளதன் அடையாளமாகத் தான் இதை பார்க்க முடிகிறது என்கிறார்கள்  இரண்டாம் கட்டத் தலைவர்கள்!

மது என்ற போதை வஸ்துவின் அடித்தளத்தில் தான் தமிழக அரசியல் அடித்தளக் கட்டுமானமே கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ஏராளமான சமூக வன்செயல்கள், குடும்ப வன்முறைகள், உயிரிழப்புகள், விதவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, இளைஞர்களின் உழைப்பாற்றல் அழிவது என என்ன தான் படுபாதகங்கள் அதிகரித்துச் சென்றாலும், டாஸ்மாக் மது உற்பத்தியிலும், அதன் விற்பனை கமிஷனிலும் பணம் பார்த்துவிட்ட அரசியல்வாதிகள் மனம் மாறத் தயாரில்லை. அதன் விற்பனையை ஓரளவேனும் மட்டுப்படுத்தக் கொள்ளக் கூட தயார் இல்லை என்பது நிதர்சனமாக உள்ளது.

இந்தப் பின்னணியில் இது வரை கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகவோ, பினாமியாகவோ மதுபான உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு சம்பாதித்து வருகிறார்கள். ஆட்சித் தலைமைக்கு வருகிறவர்கள் மாற்றுக் கட்சி மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக்கிற்கு கொள்முதல் செய்ய கணிசமான பணம் பெற்றுக் கொள்கிறார்கள்! இதில் வரும் பல நூறு கோடி வருமானத்தோடு திருப்தி அடையத் தயாரில்லை இன்றைய ஆட்சித் தலைமை என்பது தான் சமீபத்திய டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் செய்தியாகும்!

இன்றைய தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 5,400. டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையோ 2,808. அவரவர் ஏரியாக்களில் டாஸ்மாக் பாரை எடுத்து செயல்பட்டு லாபம் பார்ப்பது தான் அந்தந்த கட்சியின் மாவட்ட, ஒன்றிய, வட்டாரத் தலைவர்களின் பிரதான வருமானமாக இருந்து வருகிறது. இந்த சம்பாத்தியத்தைக் கொண்டு தான் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள், தொண்டர்களுக்கான செலவுகள் போன்றவற்றை செய்வார்கள்!

ஆனால், தற்போது அந்த சில்லறை வருமானத்தையும் கட்சித் தலைமையே கபளிகரம் செய்ய முனைகிறது என்பது தான் திமுகவிற்குள் இருக்கும் புகைச்சல்.

அதனால் தான் திமுக வரலாற்றிலேயே  முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, சொந்தக் கட்சியின் அமைச்சரைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு அந்த கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டம், முற்றுகை செய்துள்ளனர்.

அமைச்சர் கண்ணப்பனின் போக்குவரத்து துறையில் தீபாவளி ஸ்வீட் குறித்து விமர்சனம் எழுந்த போது, அதிரடி  நடவடிக்கை எடுத்து அப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வரின் வேகம், டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் தருவாயில் எங்கே போனது?  தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டதைப் போல பாவனை செய்கிறார். அவரது அமைதி இதற்கான சம்மதமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.

முதலமைச்சர் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்ட செந்தில் பாலாஜி முறைகேடு மற்றும் ஊழலுக்கு புது திட்டம் தீட்டி, போலி மதுபானம் விற்பனைக்கு ஒரு புது ரூட் போட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் எப்படி கல்லா கட்டவேண்டும் என முடிவெடுத்து தமிழகம் முழுதும் ஒரு குடையின் கீழ் பார்களை கொண்டு வரும் வகையில், ஆட்சித் தலையின் பினாமி மற்றும் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் என ஒரு மாஸ்டர் பிளான் அரங்கேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

டாஸ்மாக் பார்களை மட்டுமல்ல, அதில் விற்பனை செய்யும் சைடு டிஷ், வாட்டர் பாட்டில் ஆகியவற்றின் சிறிய லாபத்தில் கூட கட்சிக்கார்களுக்கு வாய்ப்பின்றி கார்ப்பரேட் முளை அனைத்து லாபத்தையும் ஒற்றை மையத்தில் சேர்க்கிறது! இது ஜெயலலிதாவுக்கு கூட தோன்றியிராத சிந்தனை.

வழக்கமாக ஒரு ஊரில் உள்ள பார் டெண்டர்  என்றால்,  கடையின் அமைவிடம், விற்பனையின் சதவீதம் அடிப்படையில் அரசு நிர்ணையித்துள்ள   வைப்பு தொகையை செலுத்தி டெண்டர் போடுவது வழக்கம். அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் சுமார் 20 பேர்கள் போட்டி போட்டு டெண்டரில் கலந்து கொள்வார்கள்.  தற்போது, புதிதாக யாரென்றே தெரியாத பலர், டெண்டர் போட்டுள்ளனர். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்தே பல பெயர்களுக்கு டெண்டருக்கான தொகை செலுத்தி உள்ளனர்.

இவ்வாறு தமிழகம் முழுதும் செட்டப் செய்த ஆதரவாளர்களை டெண்டர் போட வைத்து  வைத்து விட்டு, “கடந்த ஆட்சியில்  6,400 பேர்கள் தான் டெண்டரில் கலந்து கொண்டார்கள், இந்த ஆட்சியில் 11,700 பேர்கள் டெண்டர் போட்டுள்ளனர். சென்னை உட்பட 13,000 பேர்கள் டெண்டரில் கலந்து கொண்டனர்” என ஒன்றுமே தெரியாத அப்பாவி போல்,  ஒரு தூய்மையான அப்பழுக்கு அற்றவர் போல முழு பூசணிக்காயை குவாட்டர் பாட்டலுக்குள் அடக்க நினைக்கிறார், செந்தில் பாலாஜி.

போதாத குறைக்கு  தன் தம்பி அசோக் குமாரை பின்புலத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு ராமஜெயம் போல், கொங்கு மண்டலம் மட்டுமல்ல, தமிழகம் முழுதும்  அசோக்குமாரை களம் இறக்கியுள்ளார். என்றும், சின்னவர் (அசோக்), தான் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் அரசு தொடர்பான அனைத்து டீலிங்களும் இவரது  கன்ட்ரோலில்தான் நடக்கிறது. அலுவலகச் செயல்பாடு, முடிவுகள் எல்லாமே இவரைக் கேட்காமல் எந்த அதிகாரியும் செய்ய முடியாது  என்கிறார்கள். சமீபத்தில் கூட அசோக் மாமனார் மறைவுக்கு இந்த துறைகளின் உயர் அதிகாரிகள் வரிசை கட்டி நின்று அஞ்சலி செலுத்தி விட்டுப் போனார்கள்.

அசோக்குமார்

இவை அனைத்தும் உளவுத்துறை மூலம்  முதல்வர் கவனத்திற்கு செல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இது திமுகவின் சீனியர் அமைச்சர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் சீனியர்களே செந்தில் பாலாஜியை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்!

காரணம், இதன் பின்னணியில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயக்கம் காட்டுகிறாரோ.. என்ற பேச்சும் பரவலாக உள்ளது!

மன்னார்குடி கும்பலுடன் நெருக்கமாக இருந்த போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மதுபான ஆலையின் தொடர்பு இன்றும் செந்தில்பாலாஜிக்கு இருக்கிறது. இதன் மூலம் போலி மதுபானம் விற்பனையை புழக்கத்தில் விட்டால், தினசரி, மாதம், ஆண்டுக்கு, 5 ஆண்டுக்கு என  அதன் மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடிகளை விபரமாக பட்டியலிட்டுத் தான் செந்தில்பாலாஜி சபரீசனோடு கைகோர்த்துள்ளார். அவர் கொடுத்த தைரீயத்தில் தான் செந்தில் பாலாஜி களத்தில் இறங்கியுள்ளார். இதனால்தான் எதிர்க்கவும் முடியாமல், முதல்வரிடம் முறையிடவும் முடியாமல் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மனம் புழுங்குகின்றனர் .

சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிப்பது சாமானியர்கள் செய்யும் வேலை. ஆனால், செந்தில் பாலாஜியோ  சுறாமீனைப் போட்டு திமிங்கலத்திற்கு வலை விரிப்பவர். அது அவருக்கு கைவந்த கலை. அன்று ஜெயலலிதாவிற்கு, பிறகு சசிகலாவிற்கு, தற்போதோ ஸ்டாலின் மருமகனுக்கு!

ஒரு குடையின் கீழ் பார் அமைத்து போலி மதுபானம் விற்பனைக்கு மாஸ்டர் பிளான் கொடுத்து சபரீசனை மயக்கி மாயவலைக்குள் வைத்துள்ளார் பாலாஜி என்று சொல்லப்படுகிறது.

இதனால், இவர் மீது பார் முறைகேடு அல்ல, இனி வேறு எந்த ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலும், நடவடிக்கை இருக்காது. ஏன் என்றால், தற்போது, கிச்சன் கேபினடின் செல்ல பிள்ளையாக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நடக்கும் விவகாரங்களைப் பார்க்கும் போது சொந்தக் கட்சிக்காரர்களின் சாதாரண பிழைப்பிலேயே கூட மண்ணள்ளிப் போட்டு அனைத்தையும் ஒரு சில குடும்பங்களே தனக்கு உரித்தாக்கிக் கொள்வதாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. எனில், வருங்காலத்தில் அந்தக் கட்சிக்கு ஒன்றென்றால், அந்த தொண்டன் எப்படி வந்து நிற்பான்.. எனத் தெரியவில்லை! இதே பார்முலாவை மற்ற அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் பின்பற்றினால் என்ன ஆவது? இந்த லட்சணத்தில் தான் இந்த ஆட்சி ஐந்தாண்டுகளும் செயல்படப் போகிறதென்றால், பாஜகவிற்கு இவர்களே பாதை போட்டு கொடுத்து விடுவார்கள் போலும்!

கட்டுரையாளர்; அஜித கேசகம்பளன்

இரண்டாம் கட்டத் தலைவர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக