சனி, 15 ஜனவரி, 2022

சென்னை பைலட் சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது

May be an image of outdoors

Sivasankaran Saravanan  :  சென்னை ராயப்பேட்டையில் பைலட் சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நிறைய ஆங்கிலப்படங்கள் அதில் தான் ரிலீஸ் ஆகும்.
அதன் பெயர்க்காரணம் குறித்து எனக்கு எப்போதும் சுவாரசியம் உண்டு.
சென்னையின் வரலாறுகளை தொகுத்துவருபவரான திரு. ஶ்ரீராம் அவரது வலைப்பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டபோது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
Pilot என்பது ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய பேனா தயாரிக்கும் நிறுவனம்.   குறிப்பாக மையூற்றி எழுதும் fountain பேனாக்கள். இன்றும் pilot பேனா மற்றும் இங்க் வகைகள் முன்னணியில் உள்ளன.
1952ம் ஆண்டு சென்னையை சேர்ந்த திரு. பரஞ்சோதி ஆரோக்கியசாமி சஞ்சீவி என்பவர் ஜப்பான் பைலட் பேனா கம்பெனியிடம் லைசென்ஸ் பெற்று சென்னையில் The Pilot Pens Co Ind Pvt Ltd என்ற இங்க் பேனா தயாரிக்கும் தொழிலில் கால் பதிக்கிறார்.

பிராட்வே அரண்மனைக்காரத்தெருவில் உள்ள சர்ச் பக்கத்தில் பைலட் கார்ப்பரேட் ஆபீஸ் இயங்கத்தொடங்கியது. பேனாவை assemble செய்யும் தொழிற்சாலைக்கான இடமாக ராயப்பேட்டை pilot cinema தியேட்டர் இருந்த இடம் தேர்வு செய்யப்படுகிறது. சில காலம் மட்டுமே அந்த இடத்தில் செயற்பட்ட பேனா தொழிற்சாலை 1961 ம் ஆண்டு புழலுக்கு மாற்றப்படுகிறது.  அந்த நிலப்பகுதி பைலட் இடம் என்றே அழைக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் தயாரான indian pilot இங்க் பேனாக்களின் அனுபவத்தை 40 வயதுக்கு மேலான பெரும்பாலான நபர்கள் பெற்றிருப்பார்கள் என நம்புகிறேன். பைலட் பேனா வின் வளர்ச்சி முதலாளி பரஞ்சோதி ஆரோக்கியசாமிக்கு நல்ல லாபத்தை தந்தது. எனவே அந்த லாபம் தந்த முதலீட்டில் ராயப்பேட்டை பைலட் பேனா கம்பெனி இருந்த அதே இடத்தில் பைலட் சினிமா தியேட்டரை 1968 ம் ஆண்டு நிர்மாணிக்கிறார். பால்பாயின்ட் பேனாக்களின் வருகை மற்றும் புது பேனா கம்பெனிகளின் போட்டி காரணமாக பைலட் இந்தியா பேனா கம்பெனி தனது உற்பத்தியை 1978 ம் ஆண்டு நிறுத்திக்கொண்டது. ஆனாலும் அது தந்த பைலட் சினிமா தியேட்டர் மட்டும் 2014 ம் ஆண்டுவரை தொடர்ந்து இயங்கியது.  அந்த பைலட் சினிமா தியேட்டரும் இடிக்கப்பட்டுவிட்டது. பைலட் இந்தியா பேனாவின் எஞ்சியிருக்கும் ஒரே அடையாளமாக ராயப்பேட்டையில் உள்ள Pilot lane பைலட் சந்து மட்டும் இன்றும் இருக்கிறது.  May be an image of cosmetics

May be an image of text

May be an image of road, tree and text that says 'ACT NO NO PARKING 00 Mbps 100 1999 PARKI'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக