ஞாயிறு, 2 ஜனவரி, 2022

கோவை ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்துங்க - கல்வி கூடங்களில் மத நிகழ்வுகளா? மா. கம்யூனிஸ்ட்

 Rayar A -  e Oneindia Tamil News சென்னை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறத
இது தொடர்பாக இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் ஆர்எஸ்எஸ். பயிற்சி முகாம் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ். அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். கோவையில் திட்டுமிட்டு மதமோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முகாம் நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இம்முகாமை பார்வையிடச் சென்ற கோவை காவல் துணை ஆணையரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து ரகளை செய்ததுடன், அவரை தாக்கும் நோக்கோடு கீழே தள்ளியுள்ளனர். ஏற்கெனவே மத நிகழ்வுகள் கல்வி கூடங்களில் நடத்தக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி ஆர்எஸ்எஸ். அமைப்பினர் இந்த பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர்.

இதனை தடுப்பதற்கு கோவை மாநகர காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே காவல்துறை அதிகாரியையே தாக்கியுள்ளனர். எனவே, காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், மதமோதலை உருவாக்கும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், சதி வேலைக்கு திட்டமிட்டு நடைபெற்று வரும் ஆர்எஸ்எஸ். அமைப்பினரின் பயிற்சி முகாமை உடனடியாக ரத்து செய்வதுடன்,

இந்த அமைப்பினர் மீது சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டுமெனவும், இந்த முகாமிற்கு அனுமதித்த அளித்த பள்ளி நிர்வாகததின் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக