சனி, 1 ஜனவரி, 2022

ராஜேந்திர பாலாஜி இருநாட்களில் கைது? இருவரை கைது செய்த தனிப்படை போலீஸ்!

 Govindaraji Rj - | Samayam Tamil :  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பண மோசடி வழக்குகளில் கைது செய்ய போலீசார் தேடி வரும் நிலையில், அவர் டெல்லி செல்ல உதவியதாக தருமபுரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடியை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகதால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த இருவாரங்களாக போலீசாருக்கு போக்குகட்டிவிட்டு தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், தர்மபுரியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டுநரான ஆறுமுகம் மற்றும் அன்பழகனின் பினாமி என்று கூறப்படும் பொன்னுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை தர்மபுரியில் இருந்து பெங்களுரூ அழைத்து சென்று அங்கிருந்து ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தராக தகவல் வெளியானது.
காவிரி நீரை ஏரியில் நிரப்பும் திட்டம்… தருமபுரிக்கு நற்செய்தி சொன்ன வேளாண் அமைச்சர்!

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வீடியோ ஆதாரங்கள் உதவியுடன் பொன்னுவேல் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மூலம் ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என துருதுவி துருவி விசாரணை செய்கின்றனர். இந்த தகவல் அறிந்த ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றால் அங்கு போலிசார் கைது செய்வார்கள் என ரயிலில் பாதி வழியிலே இறங்கி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. போலிசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் இன்னும் இரு நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக