வெள்ளி, 14 ஜனவரி, 2022

74 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சகோதரர்கள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் விளைவு

 கலைஞர் செய்திகளை :  பிறகு நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சியில் கட்டித்தழுவி நினைவுகளை பகிர்ந்த சகோதரர்கள் !
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தது. இந்த பிரிவினைக் காரணாம இந்திய நாட்டைச் சேர்ந்த பலரும் பாகிஸ்தானிலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் இந்தியாவில் வசிக்கத் தொடங்கின.
அந்தவகையில், ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சித்திக் மற்றும் ஹபீப். இவர்கள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது குழந்தையான சித்திக் பாகிஸ்தானிலும், அவரது மூத்த சகோதரர் ஹபீப் இந்தியாவிலும் தங்கியுள்ளனர்.

இதில், ஹபீபிற்கு தற்பொழுது 80 வயது ஆகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூருக்கு சித்திக் வந்துள்ளார். இதே புனித தளத்தில் பஞ்சாப்பில் வசித்து வரும் ஹபீபும் சென்றுள்ளார்.

கர் தார்பூர் புனித தலத்தில் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டபோது சந்தோஷத்தில் கட்டித்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாயுடன் வசித்து வந்த ஹபீப் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். சகோதரர்களின் இந்த சந்திப்புக்கு புனித தலமான கர்தார்பூர் காரிடர் உதவியாக இருந்ததால் இருவரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக