சனி, 1 ஜனவரி, 2022

தஞ்சையில் 500 கோடி மதிப்புடைய பச்சை நிற மரகத லிங்கம் மீட்பு

சோதனை

  Shyamsundar -   Oneindia Tamil  :  தஞ்சாவூர்: திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத லிங்கம் ஒன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடந்த சில மாதங்களாக காணாமல் போன கோவில் சிலைகள் தொடர்பான தீவிர சோதனைகளை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் காணாமல் போன பல்வேறு கோவில் சிலைகளை இவர் தலைமையிலான குழு தேடி வருகிறது.
தொடர் சோதனைகளை அடுத்து பல்வேறு சிலைகள் கண்டிபிடிக்கப்பட்டு சிலை கடத்தல் கும்பல்களும் கைது செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்தான் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத லிங்க சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் விசாரணை நடத்தி வந்தார்.
அந்த சிலை காணாமல் போய் 5 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
 இந்த நிலையில் போலீஸ் இன்பார்மர்கள் மூலம் இந்த சிலை தஞ்சாவூரில் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு சென்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு நபர் இந்த சிலையை கடத்தி சென்றதாக தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அங்கு நோட்டமிட்ட போலீசார் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின் தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவரின் வீட்டில் சோதனை செய்தனர்.

ஆனால் அவரின் வீட்டில் அந்த மரகத லிங்கம் இல்லை. மாறாக வாங்கி லாக்கரில் சில முதலீடுகளை இவர் செய்ததற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இருந்துள்ளன. இதை வைத்து தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் அவர் வைத்திருந்த பொருட்கள் மீட்கப்பட்டன.

 அதில் லாக்கரில் மரகத லிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறையான ஆவணங்கள் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.500 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவரிடம் இந்த லிங்கத்தை கொடுத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது

Read more at: https://tamil.oneindia.com/news/thanjavur/what-the-value-of-the-maragatha-lingam-found-in-thanjavur-bank-locker-443913.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக