செவ்வாய், 7 டிசம்பர், 2021

தேர்வுக்குத் தயாராகுங்கள்.. தமிழ் மொழித்தாள் கட்டாயம்” : TNPSC தேர்வு விரிவான அறிவிப்பு

கலைஞர் செய்திகள்  : 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.


இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 2022 பிப்ரவரியில் குரூப் - 2 தேர்வும், மார்ச்சில் குரூப் - 4 தேர்வும் நடைபெறும். தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும்.

குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான 5, 831 காலி பணியிடங்கள் உள்ளது. அதேபோல், குரூப் 4 தேர்வில் 5255 பழைய காலி பணியிடங்களும், 3000 புதியகாலி பணியிடமும் உள்ளது. இதில் காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்.

தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், முறைகேடுகளை தடுக்க, ஓ.எம்.ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம், இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம். ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். டி.என்.பி.எஸ்.சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம். இதில், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போதும் பணியில் இல்லை. தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை, செப்டம்பரில் நடத்த இருந்த தேர்வுகள் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது. 2022ல் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்வுக்கான அறிவுப்பிற்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்து கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது.

ஓ.எம்.ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள் தேர்வு முடிந்தபின் இனி தனியாக பிரிக்கப்படும். தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிக தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்த நீண்ட காலத் திட்டம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக