திங்கள், 20 டிசம்பர், 2021

ஆந்திரா திராவிட பல்கலை கழகத்தில் தமிழ் கற்க மாணவர் முன்வரவேண்டும்! இல்லையேல் தமிழ் துறை நீக்கப்படும் அபாயம்

Dravidian University Admissions 2019 Open for UG, PG, Diploma and  Certificate Courses | CollegeDekho

Renganathan Rajendran  :  ஆந்திர மாநிலம் குப்பம் என்ற இடத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு மிகுந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது
 30 மாணவர்களை அனுமதிக்கக் கூடிய அளவில் உள்ள அந்த தமிழ்துறையில்  எம் ஏ தமிழ் படிக்க வரும் மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் விடுதி கட்டணம் உட்பட்ட அனைத்து கட்டணங்களும் இலவசமாக தரப்படுகின்றன
 இதனை பயன்படுத்தி மாணவர்கள் எம் ஏ தமிழ் படிக்க முன்வரவேண்டும் இல்லாவிட்டால் அந்தத் துறையை இந்த ஆண்டுடன் மூடப்போவதாக ஆந்திர அரசு தெரிவிக்கிறது
 உடனடியாக அவசரமாக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் அமைப்புகள் களத்தில் இறங்கி முப்பது தமிழ் மாணவர்கள் அந்த திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த் துறையில் சேர முயற்சி எடுக்க வேண்டும்
 20/ 12 !2021 தேதிக்குள் மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது

 ஆனால் அதனை 31/ 12/ 2021 வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது
 எனவே இந்த இரண்டு வார காலத்தில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் ஆவது திராவிட பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் படிக்க முன்வந்தால் தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திராவிட பல்கலைக்கழக தமிழ்த்துறை உயிரோடு இருக்கும்
 எனவே அவசரமாக விரைவாக வேகமாக
 தமிழ் ஆர்வலர்கள்
 தமிழ் பற்றாளர்கள்
 தமிழ் உணர்வாளர்கள் செயல்பட வேண்டும்
 தமிழக அரசும் மிகுந்த கவனம் செலுத்தி இந்த தமிழ்த்  துறையை காப்பாற்ற வேண்டும்.
 இப்படிக்கு
 *தமிழ் இராஜேந்திரன் வழக்கறிஞர் கரூர்*
9787933344
9789433344
மிகச்சுலபம். கல்லூரிக் கல்வி இயக்குனர் , அனைத்து பல்கலைக் கழகங்கள், மற்றும் முதுநிலை தமிழ்க் கல்வி வழங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினால் இயலும்.
மிகச் சுலபம்
 *வாராது வந்த மாமணியை காப்போம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக