மெய்பொ : மனிதனை மனிதன் சுமப்பது குற்றம். சங்கராச்சாரியார் பல்லக்கு துக்க வற்புறுத்தினால் காவிரியில் பல்லக்கோடு தள்ளி விடுங்கள் - பெரியார்.
பிள்ளையாரை கும்பிடுவதுமில்லை
பிள்ளையாரை உடைப்பதுமில்லை.-அண்ணா
ராமர் எந்தக் காலேஜ்ல படிச்சார்? - கலைஞர்
இத்தனை ரணகளங்களுக்குப் பிறகும் இந்த அமைச்சர்களுக்கு திமுக என்னும் கட்சியைப் பற்றிய தெளிவில்லை. சுயத்தை இழக்கும் எந்த சித்தாந்தமும் நீடித்ததாக சரித்திரம் நமக்குச் சொன்னதில்லை...
உங்களுக்கெல்லாம் கலைஞர் இருந்திருக்கனும்.
பாலகணேசன் அருணாசலம்
பகுத்தறிவு பிரச்சாரத்துக்கு மட்டுமே
ஓட்டு வாங்கித்தராது குறை சொல்பவர்கள்
எத்தனைபேரை திமுக ஆதரவாளராக மாற்றியுள்ளார்கள்...பொதுவானவர்களை ஏடாகூடமாக பேசி மடைமாற்றம் செய்ததைத்தவிர அவர்களால் திமுக வுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது
Durai Ilamurugan : இருந்தாலும் இவ்வளவு மோசமாக போகவேண்டாம்.
Durai Ilamurugan : ஆத்திகம் இருக்கலாம்
மூடநம்பிக்கை தேவை இல்லை.தேரை இழுத்து தெருவில் விடவேண்டுமா!?
Kulitalai Mano : சேகர் பாபு அதிமுக விலிருந்து வந்தவர் அவரை குறை சொல்லமுடியாது
மற்ற இருவருக்கும் திமுக தெரியலை
ஜெயசீலன் சத்தியசீலன் : கலைஞர் இருந்து என்னத்த செய்ய முடியும் மதநம்பிக்கைகைகளை அனுசரித்து போனால் தான் அதிகாரம் கிடைக்கும். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மதம் ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றிய இதுபோன்ற விமர்சனப் பதிவுகள் செய்து திமுகவுக்கு ஏன் சிரமத்தை ஏற்படுத்துகிறீர்கள்.ரம்ஜானுக்கு நோன்பு கஞ்சி குடிக்கலாம் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளலாம் ஆனால் தேர் இழுக்கக்கூடாதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக