சனி, 18 டிசம்பர், 2021

இலங்கை முழுவதும் இந்து கோயில்கள் அமைக்க முடியுமெனில் யாழ்ப்பாணத்தில் ஏன் பெளத்த விகாரைகள் அமைக்க முடியாது? அருண் சித்தார்த் கேள்வி

 Arun Siddharth  :  நல்லூர் பற்றிய அருண் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து என்ன????
கேள்வி - உலகிலுள்ள இந்துக்கள் எல்லோரும் வணங்கும் நல்லூர் கோயிலை இடித்து விட்டு அங்கு மலசலகூடம் அமைக்க வேண்டும் என நீங்கள் கூறக் காரணம் ??
பதில் - அந்தக் கூற்றை ….. ( எனது பதிலைக் கூற விடாமல் ஊடகவியலாளர் இடைமறிக்கின்றார்….)
கேள்வி— நான் ஒரு இந்து பக்திமான் அல்ல, நான் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist)என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். நான் கூறுவது சரிதானே??
பதில் - ஆம் அது சரிதான். நான் இன்னமும் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist) தான். இன்னமும் நான் ஒரு இடதுசாரியே.
கேள்வி - இன்னமும் இடதுசாரி( Left ) அவ்வாறாயின் நீங்கள் ஒரு இந்து பக்திமான் அல்ல ????
பதில் - நான், அம்பேத்கார் இந்தியாவில் என்ன செய்தார்.. அதையே தான் நாங்களும் செய்கின்றோம். நான் பெளத்த தரிசனத்தைப் பின்பற்றுகிறேன்.
கேள்வி - நீங்கள் நல்லூர் கோயில் தொடர்பாக வெளியிட்ட கருத்தை மீளப் பெறப்போவதில்லையா????
பதில் - இல்லை. எப்போதும் இல்லை .
கேள்வி - அது சரியெனக் கருதுகிறீர்களா???

பதில் - நான் இன்னமும் சரியாகவே இருக்கின்றேன். ஆனால் அந்தக் கூற்றின் முழு வசனத்தையும் எடுங்கள். ஒரு சிறு துண்டை மட்டும் எடுக்க வேண்டாம்.
கேள்வி - முழு வசனத்தையும் கூறுங்கள் பார்ப்போம். இப்போது கூறுங்கள்.
பதில் - தெளிவாகக் கூறுவதானால், சாதிப் பிரிவினை பார்த்து , குறைந்த சாதியினர் எனக் கூறி சக மனிதர்களை உள் நுழையத் தடை செய்யும் கோயில்கள் அது நல்லூர் மட்டுமல்ல அவ்வாறான பிரிவினை பார்க்கும் எந்தக் கோயிலையும் விட்டு வைக்கக் கூடாது. அவை உடைக்கப்பட வேண்டும்.
கேள்வி - உடைக்க வேண்டும்.
பதில் - ஆம் உடைக்க வேண்டும். சாதி பார்க்கும் கோயிலாக இருந்தால் , எந்தக் கதையும் கிடையாது. இந்தச் சாதிப் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கார் இயக்கம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். நாம் பெளத்தத்திற்கு மாறுவோம். பெளத்தத்தைப் பின்பற்றுவோம். இதைப் பொதுவெளியில் இங்கு கூறுகின்றேன். சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பெளத்த விகாரைகளை வடக்கில் அமைக்க முடியாது, பெளத்த மதம் வடக்கிற்கு வர முடியாது எனக் கூச்சலிடுகின்றனர் தானே. அதை நான் செய்வேன்.
கேள்வி - யாழ்ப்பாணத்தில்????
பதில் - ஆம் யாழ்ப்பாணத்தில்.
கேள்வி - யாழ்ப்பாணத்தில் அதைச் செய்ய முடியுமா???
பதில் - ஆம் முடியும். நான் செய்து கொண்டிருக்கின்றேன். பெளத்த விகாரைகளும் அமைப்பேன். பார்ப்போமே. உங்களுக்கு நாடு பூராகவும் கோயில்கள் அமைக்க முடியுமெனில் ஏன் பெளத்த விகாரைகள் நாமும் அமைக்க முடியாது.
கேள்வி - யாழ்ப்பாணத்தில் பெளத்தத்தை நிறுவ முடியுமா ???
பதில் - முடியும். நான் செய்வேன்.
கேள்வி - உங்காளல் முடியுமா இல்லையா என்பதல்ல, அது செய்ய முடியுமான ஒன்றா??
பதில் - நான் செய்து கொண்டிருக்கின்றேன். நான் பெளத்த தரிசனத்தைப் பின்பற்றுவதாக அறிவித்திருக்கின்றேன். நாம் எனது வீட்டில் அத்தனை பேரும் பெளத்தத்திற்கு மாறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக