மாலைமலர் : வீட்டிற்குள் சார்ஜ் ஏற்றியபோது இ-ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து தீ பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ் சாஹு என்ற 60 வயது முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்து தீப்பற்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் முதியவர் சுரேஷ் சாஹூ, அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சுரேஷ் சாஹூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக