நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் |
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மறுநாள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசார் அடித்ததால் தான் மாணவர் உயிரிழந்ததாக கூறி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென, மணிகண்டனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றால் கைதாகி சிறையில் உள்ளார். தமிழ்நாடு அரசு குறித்து தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது.
சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸ் தன்னை விடுவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, இரு தரப்பினருக்கு இடையை மோதல் ஏற்படும் வகையில் மாரிதாஸின் பதிவு இல்லை. அதனுடன் அதை சில மணிநேரங்களில் பதிவை நீக்கி விட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக