கலைஞர் செய்திகள் : குரங்குக்கு மூச்சுக்காற்றை செலுத்தி உயிரைக் காப்பாற்றிய கார் ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி குரங்கு ஒன்றைத் தெரு நாய்கள் துரத்திக் கடித்துள்ளது.
இதில் அந்த குரங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பிரபு குரங்குக்கு தண்ணீர் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது குரங்கு தண்ணீர் குடிக்காமலிருந்தது.
உடனே பிரபு தாமதிக்காமல் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு துள்ளி எழுந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக