வெள்ளி, 26 நவம்பர், 2021

ஆவி நாயுடன் தனது செல்ல நாய் விளையாடிய ..CCTV வி காணொளி .. அவுஸ்திரேலியாவில் திகில்

தினத்தந்தி  : தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் டிமார்கோ என்பவர், தனது வீட்டு முன்பு தனது செல்ல நாய்க்குட்டி, பேய் நாயுடன் விளையாடியதாக கூறி தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டு உள்ளார்.
31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை கேட்டர்ஸ் நியூஸ் ஏஜென்சி யூடியூப்பில் வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் பேய் நாய் என்று நம்ப மறுத்து, பலர் தங்கள் எதிர் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.


வீடியோவில், ஜேக் டிமார்கோவின் வீட்டின் முன் ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை நிறத்தில் உருவமாக வரும் ஒரு நாயை செல்லக்குட்டி நாய் துரத்துவதைக் கண்டார்.

பின்னர் அந்த பேய் நாயுடன் குட்டி நாய் விளையாடி உள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பேய் நாய் அதில் தெரியவில்லை.

அந்த பகுதி, பூட்டப்பட்ட உயரமான வேலியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே வேறு ஒரு நாய் அதன் மேல் குதிப்பது சாத்தியமில்லை.

ஜேக் இந்த வீடியோவை வீட்டிற்குள் இருந்து பார்த்தது உடனடியாக அந்த ‘பேய் நாயை’ பார்க்க வெளியே ஓடி வந்ததாகவும் ஆனால் அதற்குள் அது காணாமல் போய்விட்டது எனவும் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக