Prasanna Venkatesh - GoodReturns Tamil : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ள வேளையில்,
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து முக்கியமானதாக உள்ளது.
இதேபோல் தற்போது இருக்கும் கிரிப்டோ மோகம், 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டில் இருந்த டூலிப் பூக்கள் மீதான மோகத்திற்கு இணையானது.
முறைப்படுத்தாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சிட் பண்டுகள் எந்த அளவிற்கு ஆபத்தோ அதேபோலத் தான் முறைப்படுத்தாத கிரிப்டோ சந்தையும்.
மேலும் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சீட்டுக் கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தைத் திருடிக்கொண்டு மாயமாகி வருகிறார்களோ அதேபோல் தான் முறைப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு மதிப்பே இல்லை என்பதில்லை, ஆனால் நிலையான மதிப்பீடு இல்லை. இதேபோல் பேமெண்ட், நிதியியல் சேவைகளில் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சிகள் மதிப்பு பெற வாய்ப்பு உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கிரிப்டோ சந்தை 2.5 டிரில்லியன் டாலர் பிரச்சனையாக உள்ளது, இத்துறையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இதை எப்படி முறைப்படுத்துவது என்பது குழப்பமாக உள்ளது. அரசு தலையீடு அரசு தலையீடு இந்தியாவில் கிரிப்டோ சந்தையை முறைப்படுத்த அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இருந்து நேரடியாகத் தகவல் பெற்று, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பெரியதாக இருக்கும் போது அரசு நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு இது மோசடி தளம் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்.
இதன் மூலம் மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும். பிளாக்செயின் டெக்னாலஜி பிளாக்செயின் டெக்னாலஜி இதே வேளையில் இந்திய அரசு பிளாக்செயின் டெக்னாலஜியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும். பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணப் பரிமாற்றத்தை மிகவும் குறைந்த செலவில் அனுப்ப முடியும், குறிப்பாக வெளிநாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் குறைந்த செலவில் வேகமாக அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக