செவ்வாய், 9 நவம்பர், 2021

சீமானுக்கு பொறந்த நாள் வாழ்த்துகளா? திருந்தவே மாட்டீங்கடா-ஃபேஸ்புக்கில் கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி

  Mathivanan Maran -  Oneindia Tamil :   சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை முன்னிட்டு அவரை மிக கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் தம்முடன் குடும்பம் நடத்தி கைவிட்டுவிட்டார் என்பது விஜயலட்சுமியின் நீண்டகால குற்றச்சாட்டு. ஆனால் சீமான், இதுபற்றி எதுவும் பேசாமல் மவுனமாக கடந்து வருகிறார்.
அதேநேரத்தில் சீமானின் ஆதரவாளர்கள் நடிகை விஜயலட்சுமியுடன் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டுவது வாடிக்கை.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல நூறு வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு சீமானை விமர்சித்து வருகிறார் விஜயலட்சுமி.


ஒரு பொண்ணு ஒரு வருஷமா துடிச்சு துடிச்சு தன்னோட கதையை சொல்லி படாத பாடுபட்டு சாக கிடந்து பொழச்சு கூட்டி வந்து, ரஜினிசார் மாதிரி பெருந்தலைவருடன் அந்த பொண்ணை அசிங்கமாக பேசி துன்படுத்தி ஊரைவிட்டு ஓட்டிட்டாங்க..
இப்படி ஒரு வரலாறு ஒரு வருஷமாக நடந்த பிறகும்..சீமான் அவர்கள் நல்லா இருக்கனும்.. அவர் பொறந்த நாளை கொண்டாடி நல்லா இருக்கனும் என்று சொல்லும்போது, நீங்க திருந்தவே மாட்டீங்கடா, இந்த ஜென்மத்துல திருந்தவே மாட்டீங்கடா என்கிற மாதிரிதான் எங்களுக்கு எல்லாம் இருக்குது...

எதுக்கு அந்த தலைவர் நல்லா இருக்கனும் என புரியவில்லை. அவர் ஏற்கனவே நல்லாத்தான் இருக்கார்.. அடுத்தவங்க வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறதுங்கிறதை அவர்கிட்ட கத்துக்கனும்.. ஒரு பொருளை எப்படி பயன்படுத்திவிட்டு மொழின்னு தூக்கி எறிஞ்சு பக்கத்துல மாநிலத்துல விழுந்து நாசமாக போகட்டும்னு கத்துக்கலாம்..

ஆதாரமே இல்லைன்னா எனக்கு அவங்க யாருன்னே தெரியாதுன்னு மாஸ்டர் பிளானை ஹை லெவலில் போடுறது எல்லாத்தையும் சீமான்கிட்ட கத்துக்கனும்.

சீமான் 420 வேலைகளுக்கு எல்லாம் மாஸ்டர்னு சொல்ற சீமானுக்கு பொறந்த நாள் வாழ்த்துகளை கண்டிப்பாக சொல்லனும்தானே.. மானம், மரியாதை,சூடு,சொரணை எதுவுமே இல்லாம எப்படி இருக்கனும் வாழனும்கிறதை கண்டுபிடிச்சவர் சீமான். எதிரில இருக்கிறவன் செத்தே போனாலும் நாம எப்படி வாழனும்னுகிறதை கண்டிப்பாக சீமான்கிட்ட கத்துக்கனும்.
அதுக்கு வாழ்த்துகளை சொல்லனும். படிச்ச முட்டாள்களும் வாழ்த்துறாங்க படிச்ச முட்டாள்களும் வாழ்த்துறாங்க ஏதோ பாமர மக்கள்தான் இப்படின்னா சில படிச்ச முட்டாளுக கூட சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்க.
சீமான் அலுவலகத்தை எனக்காக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்னு அறிவிச்சாங்க.. அங்க நியாயம் எதுவும் கிடைக்காது என்பதால அந்த போராட்டத்தை நடத்த வேண்டாம்னு சொன்னேன். சீமானுக்கு மனசாட்சியே கிடையாது. என்னைப் பொறுத்தவரை சீமான் மாதிரி 420களை நம்பாதீங்கன்னு அலர்ட்தான் பண்ண முடியும். வாழ்த்துகள் தலைவா! முட்டாள்களுக்கு மத்தியில் பிறந்த நாள் கொண்டாடட்டும்! சீமான் இருக்கும் இடத்தில் இனி இருக்கமாட்டேன் என்பதற்காக கர்நாடகாவுக்கு வந்துவிட்டேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக