வியாழன், 25 நவம்பர், 2021

கனமழை சிவப்பு எச்சரிக்கை! ஆறு மாவட்டங்களில் ... ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்..

 மாலைமலர் : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை ரெட் அலர்ட்: மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.


இதற்கிடையில் தென்தமிழகத்தில் மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவானது. தற்போதும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக