திங்கள், 22 நவம்பர், 2021

இந்திய ஒன்றிய தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்திருக்கிறதா? அல்லது இருக்கிறதா?

May be an image of 1 person and text
சீன அதிபர் சென்னையில் சந்தித்த எதிர்ப்பு..! தகிக்கும் ஆதிக்க வரலாறு... |  nakkheeran

செல்லபுரம் வள்ளியம்மை  : வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்றிய அரசில் பாஜக அல்லாத அரசு அமைந்தால்?.
கடந்த இந்திய ஒன்றிய தேர்தல்களின் போது சீனாவின் ஈடுபாடு இருந்திருக்கிறதா என்பதை பற்றி விசாரிக்க வேண்டும்.
இக்கருத்தை நான் வேடிக்கைக்காக குறைவில்லை .
கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் சீனாவே இந்தியாவின் மோடி அரசால் மிகவும் இலாபம் அடைந்த நாடாக இருக்கிறது
கடந்த நான்கு வருடங்களில் இலங்கை,  சீசெல்ஸ் ,  மாலைதீவு ,  மொரிசியஸ்,   பர்மா ,  நேபால்.  பூட்டான் ஆகிய நாடுகளில் சீனா தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தி உள்ளது .
முன்பு இந்நாடுகள் எல்லாம் ஓரளவு இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடுகளாக கருதப்பட்டது. 

தற்போது பாகிஸ்தானையும் வேகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் சீன கொண்டுவந்து கொண்டிருக்கிறது
சீன எல்லையில் இருந்த டோக்லாம் பிரதேசத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மோடி அரசானது செய்தி ஊடகங்களில் மட்டுமே டோக்லாம் பிரதேசத்தை வைத்திருக்கிறது .

சீனாவின் அயல் நாடுகளில் சீன சார்பு சர்வாதிகார அரசுகளே பதவியில் இருக்க வேண்டும் என்பதில் சீனா  அக்கறையோடு செயல்படுகிறது ..
மக்களின் நலன் சார்ந்த அரசுகள் அங்கு அமைந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
சீனா ஒரு பலம் வாய்ந்த பொருளாதாரத்தையும் எல்லையற்ற மனிதவளத்தையும் உயர் தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.
சீனாவின் தொழில் விஞ்ஞான கொள்கையானது நீதி நேர்மை சார்ந்ததல்ல என்பது கவலை உரிய விடயமாகும்.
சீன ஒளிபரப்பு . ஒலிபரப்பு  சேவைகள் ரோபோக்கள் மூலம் நிகழ்த்தப்படுவதாகவும் தெரிகிறது
இதன் மூலம் மனித சமுதாயத்தை  எப்படிப்பட்ட விதத்தில் கட்டமைக்க உள்ளார்கள் என்பதை ஊகித்து கொள்ளவும்.  
 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக