வியாழன், 4 நவம்பர், 2021

குன்றத்தூரில் . காதலனை கொன்று இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை! காவலாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

tamil.asianetnews.com : குன்றத்தூர் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் காதலனை  கொன்றுவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காவலாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தொழிற்சாலை எரிந்து நாசமானதால் மூடப்பட்டது. தற்போது இங்கு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று அத்தொழிற்சாலையின் 3-வது தளத்தில் பழுதுபார்ப்பு பணிகளை கட்டிட தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். அங்குள்ள 2 கழிவறைகளைத் திறந்து பார்த்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியே அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த 2 சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த 2  பேரும் தற்கொலை செய்தார்களா அல்லது வேறு யாரேனும் இவர்களை கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில்  விசாரணையை தொடங்கினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்;- எங்களது விசாரணையில், இறந்து போன நபர் அசாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்த ரத்தன் போரா (25) எனத் தெரியவந்தது. இவர் திருமுடிவாக்கத்தில் தனது குடும்பத்துடன் தங்கி, இத்தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் இறந்து கிடந்தது, சிறுமியான அவரது உறவுக்கார பெண் எனத் தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தாாக கூறப்படுகிறது. இதை உறவினர்களும் பெற்றோரும் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமி திடீரென மாயமானார். இப்புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து, சிறுமியை மீட்டு நீதிமன்றத்தின் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகும் ரத்தன் போராவுடன் சிறுமியின் காதல் நீடித்தது.


இதை பெற்றோர் கண்டித்ததால், இருவரும் மூடியிருந்த தனியார் தொழிற்சாலையில், அங்கு காவல் பணியில் இருந்த, அதே மாநிலத்தை சேர்ந்த 2 காவலாளிகளின் துணையுடன் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, 2 காவலாளிகளும் ரத்தன் போராவை கொன்றுவிட்டு, இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள  2 காவலாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக