செவ்வாய், 16 நவம்பர், 2021

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லம நாயுடு காலமானார்! ஜெயலலிதா சிறை செல்ல காரணமானவர்

 நக்கீரன் : தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு. இவருக்கு வயது 83. உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தகவல் வெளியாகியது.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார்.
இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்கக் காரணமாக இருந்தது.
1997ஆம் ஆண்டே நல்லமநாயுடு ஓய்வுபெற்றுவிட்டார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த தன் அனுபவங்களை ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். அப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.


1961ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகச் சேர்ந்த இவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக