வெள்ளி, 26 நவம்பர், 2021

ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களின் பின்சீட்டில் அமரும் சிறுவர்களை பாதுகாக்கும் பெல்ட்

செல்லபுரம் வள்ளியம்மை  :   ஸ்கூட்டர்,  மோட்டார் சைக்கிள், சைக்கிள்  போன்றவற்றின்  பின்னால் அமர்ந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சிறிய பெல்ட் இந்த சிறுவர்களின் பாதுகாப்பை ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன்
ஆனால் பலருக்கும்  இப்படி ஒரு பாதுகாப்பு பெல்ட் இருக்கும் விடயமே இங்கு தெரியாது ,
எதுவித பாதுகாப்பு பெல்டும் அணியாமலே தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர் குழந்தைகள்  மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து பயணிக்கிறார்கள்.
படத்தில் இருப்பது போல ஒரு சாதாரண பெல்ட் இவர்களது பாதுகாப்புக்கு பெரிய உதவியாக இருக்கும்
நானும் எத்தனையோ பேரிடம் இங்கு இதைபற்றி பேசி பார்த்துவிட்டேன் யாரும் இது பற்றி போதிய கவனம் எடுப்பதாக தெரியவில்லை
 சதா புதிது புதிதாக பலசரக்கு கடைபோட்டு கடனாளியாகும் வியாபாரிகள் கூட  இந்த கோரிக்கைக்கு செவி மடுப்பதாக இல்லை.
இதை பார்க்கும் யாராவது தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து இப்படி பெல்ட்டுக்களை தயாரிக்கலாம் ,
ஏன் இது இன்னும் கட்டாய சட்டம் ஆக வரவில்லை என்றும் தெரியவில்லை.
நான்கு வயது குழந்தை கூட அப்பாவின் அல்லது அம்மாவின் முதுகை கட்டி பிடித்து கொண்டு செல்லும் காட்சி காணும் பொழுதெல்லாம் மிகுந்த பயமாக இருக்கிறது please think before carry your kids

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக