வெள்ளி, 19 நவம்பர், 2021

இந்தியாவில் கற்பழிப்பு அதிகரித்திருக்கிறது. டெங்கு கொரோனா வெள்ளம் புயல் எல்லாவற்றையும் விட அதிகம் .. காவிகளின் சாதனை

May be an image of 1 person and text that says 'NOTV US TRAVEL ADVISORY 'DO NOT TRAVEL ALONE, PARTICULARLY IF YOU ARE A WOMAN' COINSWITCH KUBER US TRAVEL ADVISORY FOR INDIA FLAGS RAPE AS BIG CONCERN NDTV US TRAVEL ADVISORY 'INDIAN AUTHORITIES REPORT RAPE IS ONE OF THE FASTEST GROWING CRIMES IN INDIA US ADVISORY: DON'T TRAVEL ALONE, ESPECIALLY IFA WOMAN'

Karthikeyan Fastura  :  மோடி அரசின், பிஜேபி கட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்று. இது நாள் வரை இந்தியாவில் கோவிட் பரவல் இருக்கிறது, டெங்கு காய்ச்சல் இருக்கிறது, ப்ளூ காய்ச்சல் இருக்கிறது, பருவமழை மோசமாகி இருக்கிறது, பூகம்பம் வந்திருக்கிறது, வெள்ளம் வந்திருக்கிறது, கலவரம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று பல Advisory Flag வந்திருக்கிறது.
முதன்முறையாக இந்தியாவில் கற்பழிப்பு அதிகரித்திருக்கிறது.
ஆகவே பெண்களுக்கு பாதுகாப்பில்லை, தனியே செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு இது தான் முதன்முறை.
ஒட்டுமொத்த உலகின் முன்பு இந்தியா தலைகுனிந்து போயுள்ளது. இதற்கு முழு பொறுப்பும் மத்திய பிஜேபி அரசும் அதன் மாநில அரசுகளின் அவர்களின் வாலறுந்த காவி குரங்குபடைகளும் தான்.


இதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து தேசத்தின் மானத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா..? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. இவர்கள் நம்பும் மனுதர்மத்தில் பெண்ணை கற்பழிக்கவே படைக்கப்பட்டதாக கூறும்போது எப்படி அதை தடுப்பார்கள்.
ஒரு பிரபல மனிதர் அரசிற்கு எதிராக கொஞ்சம் பேசிவிட்டால் போதும் சங்கிகள் குறிவைப்பது அவர்களது பெண் குழந்தைகளை கற்பழிப்போம் என்று தான் ஆரம்பிப்பார்கள். சங்கிகளில் படித்தவர் படிக்காதவர் வித்தியாசம் எல்லாம் இல்லை. ஐஐடி-யில் படித்த மாணவர் தான் கிரிக்கெட் வீரரின் மகளை கற்பழிப்போம் என்று ட்விட் செய்தார் என்பது சமீபத்திய செய்தி.
இவர்கள் கலாச்சார காவலர்களாக தம்மை கூறிக்கொண்டு பெண்களின் ஆடை, கலை, பேச்சு, எழுத்து என்று எல்லாவற்றையும் முடக்கப்பார்க்கிறார்கள். இவர்களின் ஆட்சியில் தான் சுப்ரிம் கோர்ட் நீதிபதியின் மீதே பாலியல் குற்றசாட்டு வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடைசி வரை நீதியே கிடைக்காமல் போனது.
இன்று ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், பாலியல் அத்துமீறல் நடந்தால் அவருக்கான நீதி கிடைக்குமா என்றால் கண்ணுக்கு எட்டியவரை கானல்நீர் தான்.
ஆனால் குற்றவாளிகளுக்கு உள்ள ஒரே ஒற்றுமை அவர்களின் காவிமய சிந்தனை தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக