புதன், 3 நவம்பர், 2021

சிறுமி வன்புணர்வு குற்றவாளி மணிகண்டனால் சிறுமி குடும்பத்திற்கு ஆபத்து?

 Arumugam Selvi  :  சிறுமியை வன்புணர்ச்சி செய்த டிராக்டர் ஓட்டுனர் மணிகண்டன்  கைது.
திருநெல்வேலி மாவட்டம் இராமநாதபுரம் வட்டத்திற்குட்பட்ட ஆத்தாங்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் வசிக்கிறவர் சூசை நாதன் லெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சூசைநாதன் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சனிக் கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தெருவின் சென்ற சூசைநாதன் மகளை அதே தெருவில் வசித்த மணிகண்டன் என்ற டிராக்டர் ஓட்டுனர் சிறுமியை கையைப் பிடித்து இழுத்து சத்தம்போட விடாமல் வீட்டிற்குள் வன்புணர்ச்சி செய்துள்ளான்.
 நீண்ட நேரம் சிறுமியை தேடிய லெட்சுமி தனது மகள் ‌மணிகண்டன் வீட்டிற்குள் இருந்து வருவதை பார்த்து அதிர்ச்சியுற்று விசாரித்த போது மணிகண்டன் தவறு செய்ததை கூறி சிறுமி அழுதுள்ளார்.
லெட்சுமி சம்பவ எல்லைக்குட்பட்ட இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தபோது நீங்க வள்ளியூர் அணைத்து மகளிர் காவல் நிலையம் செல்ல கூறியுள்ளார்கள். வள்ளியூர் பெண் காவல் நிலையம் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துவிட்டு எதிரியை நீங்களே கண்டுபிடிச்சி கொடுக்க என்று கூறியுள்ளனர்.
சம்பவத்தின் போது உறவினர்களால் அடிவாங்கி ஓடிய மணிகண்டனை சமாதானம் செய்வோம் என பேசி இன்று பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தப் பின்னர் சிறைப் படுத்தப்பட்டுள்ளான் மணிகண்டன்.  
மணிகண்டன் ஏற்கனவே அத்தை மகளை காதலித்து கல்யாணம் செய்து இரு குழந்தைகள் இருக்கிறது என்றும். வேறு ஒரு பெண்ணை காதல் என் காம களியாட்டம் நடத்தி கைவிட்டவன் என்றும், அவன்மீது திருட்டு உட்பட குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
காவல்துறை பெண்களை போதை பொருளாக பாவிக்கிற காமுகன் மணிகண்டனுக்கு நீதி மன்றம் கடுமையாக தண்டிக்கும் விதமாக குற்ற அறிக்கையை தாக்கல் செய்து சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
 பாதிக்கப்பட்ட குடும்பத்தினை மணிகண்டன் நண்பர்கள் கொலை மிரட்டல் செய்வதாக தகவல் கிடைக்கிறது.  ஆகவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் சாட்சிகளுக்கும் போலிசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
கள ஆய்வு.
 ஏ.கே. நெல்சன். ஒருங்கிணைப்பாளர். மக்கள் போராட்ட குழு.
நன்றி
கி.ஆறுமுகம்.
சமூக நீதி. மதுரை.
புகைப்படம்; மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக