திங்கள், 1 நவம்பர், 2021

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

 நக்கீரன் செய்திப்பிரிவு : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்  என்ற நிலையில்  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 12.09.2021அன்று  நடைபெற்றது.
இந்தியா முழுவதும் 16.14 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்குத் தேர்வு முடிவுகளை அனுப்பியுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு மாணவர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில் மும்பை நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவுகளை வெளியிட அனுமதி அளித்திருந்த நிலையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக