ஞாயிறு, 28 நவம்பர், 2021

கனமழை நீடிப்பு... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 மாலைமலர் : கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அவ்வகையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படடுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக