திங்கள், 15 நவம்பர், 2021

மகாராஷ்டிரா போலீஸ் ஸ்டேஷன் ..16 வயது சிறுமியை 6 மாதங்களாக 400 பேர் பாலியல் வல்லுறவு..

tamil.asianetnews.com -Thiraviaraj RMமகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ராமசாமி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், ’’காவலர்கள் கூட பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.  அவர் இருமாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக மூன்று குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested


அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தை திருமண சட்டம், பலாத்காரம், கற்பழிப்பு மற்றும் போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி ராஜா ராமசாமி தெரிவித்துள்ளார். சிறுமி  சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்து உள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளார். சிறுமி அவரது கணவர் மற்றும் மாமியாரால் தாக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டு உள்ளார்.

இதனால், அங்கிருந்து ஓடிப்போய் மீண்டும் தந்தையை சந்தித்து உள்ளார். ஆனால் அவர்  ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சிறுமி பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையில் உள்ள பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்து உள்ளார். இதை தொடர்ந்து அங்கு அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகத்தொடங்கினார். 6 மாதங்களில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் அவரை பாலியல் வன்முறை செய்து உள்ளனர்.Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested

இது குறித்து சிறுமி குழந்தைகள் நலக் குழுவிடம்  அளித்த அறிக்கையில், “நான் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பலமுறை அம்பஜோகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, ஒரு போலீஸ்காரரால் நான் பாலியல் துன்புறுத்தப்பட்டேன் என கூறி உள்ளார்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தானேயில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். மற்றொரு பயங்கரமான சம்பவத்தில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குல்கான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நவம்பர் 9 ஆம் தேதி சிறுமி தனியாக இருந்தபோது குற்றவாளிகள் வீட்டுக்குள் புகுந்து, உள்ளே இருந்து பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது சிறுமி தனது தாயிடம் நடந்த பயங்கரமான சம்பவத்தை விவரித்துள்ளார், பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களால் புகார் பதிவு செய்யப்பட்டது.Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested

செப்டம்பர் 22 அன்று, டோம்பிவலி கற்பழிப்பு வழக்கு, மன்படா காவல் நிலையத்திற்கு வந்து, 29 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகாரளித்த பின்னர், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இது குறித்து விசாரிக்க தானே காவல்துறை அதிகாரிகளால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர் மற்றும் இரண்டு சிறார்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக