வியாழன், 14 அக்டோபர், 2021

YGP மதுவந்தி 1,21,30,867 ரூபாய் கடனை செலுத்தாமல் ஏய்ப்பு? வீட்டிற்கு அதிகாரிகளை வீடு சீல் வைப்பு

கலைஞர் செய்திகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : கடனை கட்டாமல் இழுத்தடித்தாரா? - நடந்தது என்ன?
பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி கட்டாத காரணத்தினால், பா.ஜ.க நிர்வாகியும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பா..ஜக பிரமுகரும் நடிகையுமான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் நடிகை மதுவந்தியின் வீடு ஒன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் கடன் வாங்கி சில மாதங்கள் மட்டுமே வாங்கிய கடனுக்கான தவணைகளை கட்டியுள்ளார்.
மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியையும் தவனை பணத்தையும் கட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் மதுவந்தி வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து ரூபாய் 1,21,30,867 குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால் அனுப்பிய நோட்டீஸூக்கும் உரிய பதிலை அளிக்காமல் மதுவந்தி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கொடுத்த கால அவகாசம் முடிந்த நிலையில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாங்கப்பட்ட வீட்டுக்கு வந்த அதிகாரிகள் வீட்டை சீல் வைத்தனர்.
மதுவந்தி வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : கடனை கட்டாமல் இழுத்தடித்தாரா? - நடந்தது என்ன?

இதற்கு முன்னதாக இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் அல்லிகுளம் நீதிமன்றத்தி வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றமும் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்தே அதிகாரிகள் மதுவந்தியின் வீட்டை போலிஸார் பாதுகாப்போடு பூட்டி சீல் வைத்தனர். மேலும் அதிகாரிகளிடம் மதுவந்தி பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தாக கூறி ஒய் ஜி மகேந்திரன் மகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக