புதன், 27 அக்டோபர், 2021

flash back நக்கீரன் : சத்துணவு முட்டையில் சத்துணவு அமைச்சர் சரோஜா கமிஷன் நிக்காலோ!

நக்கீரன் : :வியாழன், 23 நவம்பர், 2017     :குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க என்று உலக சுகாதார நிறுவனம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறது."
ஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை சத்துணவுக் கூடங்களில் வழங்கினார் கலைஞர். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
ஒருபக்கம் முட்டை உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் பீதியைக் கிளப்புகின்றன. தமிழகத்தில் 4 ரூபாய்க்கு விற்ற முட்டை 7.00 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்ந்தது உயர்ந்தபடி இருக்க, இப்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களின் அசைவ உணவுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.

காய்கறி விலையும் அத்தியாவசிய மளிகைச் சாமான்கள் விலையும் ஏற்கெனவே றெக்கை கட்டி பறக்கும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

;தேசிய முட்டை ஒருங்கிணைப்பு விலை நிர்ணயக் குழு நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வந்தது. நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி ஜி.எஸ்.டி. அமலான பின்னர், முட்டை விலை நிர்ணயம் வாரத்துக்கு 3 முறை என்று மாற்றி அமைக்கப்பட்டது. உற்பத்தி, தேவை, ஏற்றுமதி ஆகியவற்றின் அடிப்படையில் முட்டை விலையில் ஏற்ற, இறக்கம் இருப்பது வழக்கம்.

அந்த வகையில் வரலாறு காணாத இந்த முட்டை விலை ஏற்றத்துக்கு, முட்டை உற்பத்தி 25 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டில் முட்டை உற்பத்தி 8 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. 2016-17ம் ஆண்டில் இதைவிட கூடுதலாக உற்பத்தி இருந்தது. அதன்காரணமாக, முட்டையை உற்பத்தி செலவான ரூபாய் 3.50 க்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு முட்டை உற்பத்தியாளர்கள் ஆளானார்கள்.

இந்நிலையில்தான் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிலவிய வறட்சியால் பல முட்டைப் பண்ணைகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து, முட்டை உற்பத்தி நாள் ஒன்றுக்கு 3 கோடியே 25 லட்சத்தில் இருந்து 3 கோடியாக குறைந்துவிட்டது.இதன்விளைவாக, சில தினங்களுக்கு முன், 4 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டைகள் தற்போது 7 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது.

;வால், சத்துணவு திட்டத்துக்கு முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.

அவர்கள் மூலமாக வாரத்துக்கு 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அரசுக்கு ஒரு முட்டை ரூ.4.43 -க்கு விநியோகம் செய்வதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.

ஆனால், விலை உயர்வு காரணமாக கூடுதல் விலை கொடுத்து முட்டையைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, முட்டை உற்பத்தி குறைந்துவிட்டதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிர்ணயம் செய்துள்ள விலையைக் காட்டிலும், அதிக விலை கொடுத்து, முட்டையைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். கூடுதல் லாபம் கிடைப்பதால், சத்துணவு திட்டத்திற்கு குறைந்த விலைக்கு முட்டையை வழங்க முட்டை உற்பத்தியாளர்கள் முன்வரவில்லை. எனவே, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முட்டை இருப்பு வைப்பது குறைந்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல் முட்டை விலை அதிகரித்ததைக் காரணம் காட்டி முட்டை வினியோகத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாதாரண ஏழை மக்களுக்கு எளிதாக கிடைத்து வந்த ஊட்டப்பொருளின் விலையும் உச்சத்துக்கு சென்றுவிட்டது. கார்த்திகை மாதம் பிறந்தால் முட்டை விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

;ஆண்டுதோறும் கார்த்திகை மாதந்தொடங்கி காய்கறிகள் விலை உயர்ந்தும் முட்டை, இறைச்சி விலை குறைந்தும் இருப்பது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு காய்கறி விலைக்கு நிகராக முட்டை விலை அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்வால் ஓட்டல்களில் ஆம்லேட், ஆஃபாயில் ரூ.10லிருந்து ரூ.15 ஆக விலை உயரும் என்கிறார்கள்.

;முட்டைக்கு இப்போ ஆபத்து வந்துருச்சு... கட்டுப்படுத்த தவறிய அரசுக்கு எப்போ முடிவு வரும் என்று கேட்கிறார்கள் மக்கள்!
- இசக்கி&nb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக