செவ்வாய், 19 அக்டோபர், 2021

ஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தப்ப முடியாது: ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எச்சரிக்கை

latest tamil news

Warning, IS, Shia Muslims, Will be Targeted, Everywhere, The Islamic State, ஆப்கானிஸ்தான், தலிபன்கள், ஷியா முஸ்லிம்கள், ஐஎஸ் பயங்கரவாதிகள், எச்சரிக்கை,

தினமலர் : காபூல்: '‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்களிடம் இருந்து தப்ப முடியாது,'' என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக.,15ம் தேதி கைப்பற்றினர். ‛'ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவர்,'' என, தலிபான்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால், ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் கடந்த 8ம் தேதி மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த 15ம் தேதி கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.


ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையில், '‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது. எங்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவர். குறிப்பாக, ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்,'' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக