சனி, 9 அக்டோபர், 2021

கிளிநொச்சி.. .அப்பளம் சாப்பிட்ட சிறுமிக்கு சூடு வைத்த தாய்

Tamilmirror Online || அப்பளம் சாப்பிட்ட சிறுமிக்கு சூடு வைத்த தாய்

tamilmirror.lk : கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாயார் நேற்றைய தினம் சமைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்பளம் வாங்கி வருமாறு மகளிடம் கூறியுள்ளார்.
அப்பளத்தை வாங்கிய சிறுமி அதை பச்சையாக உட்கொண்டுள்ளார். இதன் காரணத்தினால் ஆத்திரமடைந்த 5 வயதுச் சிறுமி வாயில் நெருப்பால் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதையடுத்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமையம் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக