வெள்ளி, 8 அக்டோபர், 2021

பாகிஸ்தானும் தலிபான்கள் வசமாகுமா? தாலிபான்கள் மத்தியில் நிலவும் துடிப்பு

 .tamilmirror.lk  : பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது.
ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.
தலிபான் தலைமைகள் ஆப்கானிஸ்தானில் தமது வெற்றியில் பூரிப்படைந்திருக்கும் நிலையில் பல போராளிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இருப்பதும், இஸ்லாமிய ஷரீஹா சட்டத்தை திணித்திருப்பதும் மட்டும் தமது போராட்டத்தின் முடிவல்ல என்றும் இதுவே உலகில்  ஜிஹாத்தை பரப்புவதற்கான ஆரம்பம் என்றும் நம்புகின்றனர்.

காபூலின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிநிதிகளாகவும், பாதுகாப்பாளர்களாகவும் இருக்கும் பல தலிபான் போராளிகளுடன் பேசும்போது ஜிஹாத்தையும், இஸ்லாமிய சட்டத்தையும் திணிப்பதற்கான தமது அடுத்த இலக்கு பாகிஸ்தானே அவர்கள் பார்வையில் இருப்பதை அறிய முடிந்தது.

தலிபான் போராளிகள் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாத்துக்கு விரோதமானது என்றும் அங்கு தற்கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்து
ஷரீஹா சட்டத்தை கொண்டு வருவதற்காக தம் உயிரைக்கொடுக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரீஹா சட்த்தை கொண்டு வந்துள்ளோம்.

இனி பாகிஸ்தானிலும் அதையே செய்வோம். நாங்கள் பாகிஸ்தானை தாக்கி அந்நாட்டில் விரைவில் இஸ்லாமிய ஷரீஹா சட்டத்தைக் கொண்டுவருவோம். இன்ஷாஅல்லாஹ் என்று தலிபான்போராளி ஒருவர் கூறினார்.

பாகிஸ்தானின் தற்போதைய அமைப்பானது இஸ்லாத்துக்கு விரோதமானதும், தவறானதுமாகும்.

நாங்கள்ஆப்கானிஸ்தானில் செய்துள்ளதுபோன்று பாகிஸ்தானில் ஜிஹாத்தைக் கொண்டுவருவதோடு  அங்கு இஸ்லாமிய சட்டங்களையும் பரப்புவோம் என்று மற்றொரு தலிபான் போராளி கூறினார்.

பேச்சுவார்த்தையொன்றின்போது அமெரிக்காவுக்கு தளங்கள் வழங்கியமைக்காகவும், ட்ரோன் தாக்குதல் நடத்த அனுமதியளித்ததற்காகவும் தலிபான்கள் பாகிஸ்தானை கடுமையாக சாடினார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ பொருட்களுக்கான தளவாடங்கள் மற்றும் பாதைகளை வழங்கியமைக்காகவும் அவர்கள் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிப்பேசினர்.

பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு பொம்மை அரசாங்கமாகும். அவர்கள் அமெரிக்காவுக்கு தளங்களை வழங்கினார்கள். நேட்டோ விநியோகத்துக்காக மார்க்கங்களை வழங்கியதோடு எங்களுக்கெதிராக அவர்களுடன் வேலை செய்தனர். இது சரி அல்ல. நாங்கள் நிச்சயமாக பாகிஸதானின் தற்போதைய பொம்மை அரசாங்கத்தை மாற்றி இஸ்லாமிய சட்டத்தை விரைவில் கொண்டுவருவோம் என்றும் அவர் கூறினார்.

தலிபான் தலைமை பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டுக்கு எதிராகவும் தமது மண்ணை பயன்படுத்த அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனாலும் தலிபான் போராளிகளின் உணர்வுகள் பெரிய அளவில் பிரதிபலிக்கலாம். இத்தகையோரை மற்ற குழுக்கள் பயன்படுத்தி பாகிஸ்தானை இலக்கு வைப்பதோடு மட்டுமன்றி விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் தலிபான் தலைமையையும் வெளியேற்றலாமென்றும் அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக