சனி, 23 அக்டோபர், 2021

ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை! கோவா திரைப்பட விழாக்கள் போல புகழ் வாய்ப்பு நழுவியது

May be an image of 1 person and beard

Vediyappan M Munusamy :  ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த
திருடன் மாதவன் பிள்ளை
“ஊட்டி திரைப்பட விழா ஏன் நடக்கவில்லை?,”
என்பதுதான் நமது நலம் விரும்பிகள் பலரிடமிருந்து அவ்வப்போது  கேட்கப்படும் கேள்வி.
கோவா திரைப்பட விழாபோல, ஊட்டி திரைப்பட விழா என்பது எமது கனவுகளில் ஒன்று. பலரையும் இணைத்து, ஒரு குழுவாக இருந்து ஊட்டி திரைப்பட சங்கத்தை பதிவு செய்து முறையாக துவக்கினோம். தலைவராக இருந்து அதற்கு  உருவம் கொடுத்தவர் வழக்கறிஞர் அண்ணன் பால நந்தகுமார்.
2017, 2018 என இரண்டு ஆண்டுகள், பல்வேறு சோதனைகளைக் கடந்து, தமிழ், மலையாளம் , கன்னடம் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற பலரின் ஒத்துழைப்போடு கையிலிருந்த பணத்தை செலவு செய்து மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.

 முதலாமாண்டைக் காட்டிலும், இரண்டாம் ஆண்டு ஆதரவு வியக்கத்தக்க வகையில் இருந்தது. பார்வையாளர்கள் மற்றும் கலைஞர்களுக்குள் இருக்கும் சுற்றுலா மனநிலையோடு, கலை மனதையும் சேர்த்து இவ்விழா 8 டிகிரி ஊட்டி குளிரில் கொண்டாட்டமாக நடத்தப்பட்டது.
படங்களை அதற்கான நுழைவுக் கட்டணத்துடன் அனுப்பவும், ஒழுங்கு படுத்தவும் பெருந்துணையாக இருந்தது Film Freeway என்ற  இணையதளம்.
ஒவ்வொருமுறையும் சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் அளவுக்கு நாங்கள் கையிலிருந்து பணத்தைச் செலவு செய்து விழாவை முடிப்போம். ஊட்டியில் உள்ள முக்கியமானவர்கள் ‘ஏன் எங்களிடம் டொனேசன் கேட்கவில்லை?’ என்று பால நந்தகுமாரிடம் கேட்பார்கள். ஆனால் அப்போதும் ‘இது நம்ம ஊரு விழா, நம்ம பணத்தைப் போட்டு நடத்துவோம். பிறகு பார்த்துக்கலாம்’ என்று தனது பணத்தையே செலவளித்தார். விழா சிறப்பாக முடியும். வெளிநாட்டில்  பரிசு வென்றவர்களுக்கு முறையாக முதல்கட்டமாக அவர்களுக்கான  நினைவுப் பரிசுகள் பார்சல்கள் அனுப்பியாச்சு. பரிசு பெற்றவர்களுக்கு காசோலைகள் தயாராகிறது. பரிசு பெற்றவர்களுக்குக் கொடுக்க  Film Freeway மூலம் கிடைக்கக்கூடிய (சுமார் இரண்டு லட்சம்) ரூபாயை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
விழா தலைவரின் பாக்கெட்டில் கைவைத்து, ஊட்டிக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வைத்து சொந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்ட  ஒரு திருடன், Film Freewayவோடு தொடர்பில் இருந்த ஒரே காரணத்திற்காக தன் சொந்த வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்று, மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டான்.
அவன் பெயர் மாதவன்பிள்ளை.
ஆடிய கால், சுருட்டிய பணத்தாசை சும்மா இருக்காதுதானே?. அடுத்தாண்டு விழா நடத்த முடியாத சூழல். ஆனால் நல்லவன் வேஷம் போடுபவர்கள் எப்போதும் சும்மா இருக்க மாட்டார்கள்.  கேரளாவில் தனது கைவரிசையைக் காட்டிவிட்டு, இப்போது மீண்டும் ஊட்டிக்கு வந்திருக்கிறான்.
எங்களிடம் எந்தவித அனுமதியும் கேட்காமல், தகவல் தராமல் ஊட்டி திரைப்பட விழாவுக்காக ஆரம்பிக்கப்பட்ட முகநூல் பக்கத்தை முதலில் புதிய பெயருக்கு மாற்றிக்கொண்டான். பெயரை மாற்றியவர்கள், புகைப்படங்கள், எங்கள் உழைப்பில் உருவான எந்த அடையாளத்தையும் மாற்றாமல் அப்படியே புதிய பெயரில் கொஞ்சமும் கூச்சமில்லாமல் ஒரு விழா எடுக்கிறார்கள்.  நமது நலம் விரும்பிகள் அல்லது கலை விரும்பிகள் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றே இரண்டாண்டு கழித்து இதை இங்கே எழுதுகிறேன்.
ஒரே ஒரு தவறான ஆள் ஒரு இயக்கத்தையே அழித்துவிடுவான் என்பதற்கு மாதவன்பிள்ளை என்ற ஒருவன் மட்டுமே எனக்கு வாழ்நாள் உதாரணம்.  இதோ எப்போதும்போல புகழ் விரும்பாதவன்போல தனது முகத்தை மறைத்துக்கொண்டு, பின்னாலிருந்து இயக்க, அவன் பின்னாலும் ஒரு கூட்டம் நம்பிக்கையோடு போகிறார்கள்.
நடத்துங்கள்…
எங்கள் விழா விரைவில் நடக்கும்.
விழாவில் தொடர்புடைய Ooty film Society உறுப்பினர்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக