வியாழன், 7 அக்டோபர், 2021

சென்னையில் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த யோகா மாஸ்டர்!

Yoga master sexually harasses teenage girls in Chennai | Tamil Nadu News

Govindaraji Rj | Samayam TamilU  : சென்னையில், யோகா பயிற்சி என்ற பெயரில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் யோகராஜ் என்கின்ற பூவேந்திரன் யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வரும் இவர் 'பாட்னர் யோகா' என்ற பெயரில் பல கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்கள் பலருக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்துக்கொடுத்து, பின்னர் அவர்களை சீரழித்து வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அதில் சில பணக்கார பெண்களை மிரட்டி பல லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவில் முதலிடம் பிடித்த மாவட்டம்!
இந்நிலையில், யோகராஜால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தியாகராயநகர் காவல்துணை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் யோகா மாஸ்டர் யோகராஜை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் வடு மறைவதற்குள், சென்னையில் யோகா கலை கற்றுத்தருவதாக கூறி நடைபெற்றுள்ள இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக