வெள்ளி, 29 அக்டோபர், 2021

எம்ஜியார் ஒரு சிறந்த புகைப்பட கருணாநிதி .. அதிமுக பொன்விழா மலர் கூத்து ..

May be an image of 3 people and text that says 'பொன்விழா சிறப்பு மலர் அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். 5.எம்.ஜி.ஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி. எந்த நாடடுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்தி ருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப்பிடித்தபானவர்களுக்குப் மகிழ்ர்கார்'

Diwa  :  அதிமுக பொன்விழா சிறப்பு  மலர் புத்தகத்தை அச்சடிக்கும் முன்பாக அச்சகத்தின் ப்ரூப் ரீடரை வர வைத்த அதிமுக இணை துணை இயக்குநர்கள் நல்ல கவனமா ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக படிச்சு பாத்து ப்ரூப் ஒக்கே செய்ங்க ...
 ஏன்னா நம்முடைய அதிமுக கட்சியின் வரலாற்றை பதிவு செய்யும் பொன்விழா மலரில் , பழைய நிகழ்வுகளை எழுதும்போது MGR-ன் வாழ்க்கை வரலாறும் வரும்!
அப்படி அந்த வரலாற்றை எழுதும்போது
கலைஞருடன் - அறிஞர் அண்ணா...
கலைஞருடன்- MGR என அப்போது நடந்த சில வரலாற்று நிகழ்வுகளையும் எழுத வேண்டி இருக்கும் அப்படியான இடத்தில் மறந்தும் கூட கலைஞர்ன்னு எழுதிடாதீங்க... கலைஞரை கருணாநிதி... கருணாநிதி என எழுதிடுங்க என ஆளூமைகள் ப்ரூப் ரீடருக்கு உத்தரவிட...
இரட்டை ஆளூமைகளின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்திய ப்ரூப் ரீடர்...கலைஞர் என அச்சிட வேண்டிய இடத்தில் எல்லாம் கருணாநிதி கருணாநிதி என அச்சு பிசகாமல் அச்சிட்டு பொன்விழா மலரை வெளியிட்டும்விட்டனர்......

கலைஞர் என்பதை கருணாநிதி என மாற்றி அச்சிட சொன்ன விசயம் நமக்கும், ப்ரூப் ரீடரையும் தவிர யாருக்கும் தெரியாது என அதிமுக தலைமை நினைத்திருக்க...
இப்போது அந்த அதிமுகவின் அல்ப்ப புத்தி வெளியே தெரிந்துவிட்டது.. எப்படி தெரிந்தது...
இப்படித்தான் தெரிந்தது...
MGR ஒரு கை தேர்ந்த "புகைப்படப்கலைஞர் " - என அப்புத்தகத்தில் பதிவாக வேண்டிய ஒரு இடத்தில் ,ஆளூமைகளின் உத்தரவுப்படி கலைஞர் என்கிற வார்த்தையே அச்சடிக்கக்கூடாது என்பதினால் "புகைப்படக்கலைஞர் " -என்பதை"புகைப்பட கருணாநிதி " என ப்ரூப் திருத்தி எழுதி விட்டார்....
என்ன ஒரு கடமை உணர்சி பாருங்க மக்களே...

1 கருத்து:

  1. சொற்கள் உள்ளீட்டில் find & replace என்று ஒரு வசதி உள்ளது எல்லோருக்கும் தெரியும். கலைஞர் என்ற வார்த்தை கருணாநிதி என்று replace ஆகவேண்டும் என்று ஒரு command கொடுத்தால் மொத்த பைலையும் அது மாற்றிவிட்டிருக்கும். இதை சரிபார்க்க கூட எவரும் இல்லை பாருங்கள்

    பதிலளிநீக்கு