புதன், 6 அக்டோபர், 2021

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்தவர் .. உண்மையில் நடந்தது என்ன? பல தவறான செய்திகள்..

May be an image of 1 person and text
May be an image of 1 person and text

LR Jagadheesan  : முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்தவர் இறந்து விட்டார் . முதல்வரின் பாராமுகம் ?  என்றெல்லாம் செய்திகளை இணையத்தில் பார்க்கிறோம் .
தமக்கு தெரிந்த சில தவறான செய்திகளை வைத்து கொண்டு சில அரைகுறை விற்பன்னர்கள் செய்திகளை இங்கே பதிந்து வருகிறார்கள் .
முதலில் ஜமீன்  தேவர்குளம் கிராமத்தில்  நடந்தது என்ன ?
 கிராமத்தில்  இதுவரை  பொது பிரிவில் அனைவரும் போட்டி இடும் வண்ணமே  ஊர் பஞ்சாயத்து தேர்தல் இருந்த  பொழுது அதன் கடைசி  ஊர் தலைவராக இருந்தவர் கமலா , கமலாவின் கணவர் பெயர் பாலகிருஷ்ணன் .அந்த பகுதியில் நியாயமாக தொழில் செய்து வருபவர் . கமலாவின் ஐந்து ஆண்டு பஞ்சாயத்து நடப்பில் அந்த ஊர்  உதாரண ஊர் என்றும்;  தீண்டாமை அற்ற ஊர் என்றும் மாவட்ட தலைவரின் விருது பத்து லக்ஷம் வாங்கி உள்ள கிராமம் அது . தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட  கிராமம்  அது என்பதை விட .  தீண்டாமை  வாசமே அற்ற ஊர் அது .
பல நல்ல  திட்டங்களை செயல்களை செய்து முன்னோடி கிராமம் என்று பெயர் எடுத்த ஊர் .


அந்த சுற்று வட்டாரத்தில் ,வங்கி  சேவை , மருத்துவ சேவை என்று பல வசதிகளை பாலகிருஷ்ணன் குடும்பத்தார்  மற்றும்  அந்த கிராம இளைஞர்கள் முயற்சியில் அனைவரும் சேர்ந்து  அந்த கிராமம் பெற்றுள்ள நன்மைகள் ஏராளம் .
மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் இந்த கிராம பஞ்சாயத்து   பட்டியல் இனத்தவர்களிற்கு என்று மாற்றப்பட்ட பொழுதே அப்போது  அங்கு போட்டி   இட  விண்ணப்பம் கொடுத்தவர் இப்போதைக்கு ஊர் தலைவராக  தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள ராமசாமி என்பவர். (இவரும்  பட்டியல் இனத்தை  சேர்ந்தவர்தான் , இவரைத்தான் தகுதி அற்றவர் என்று #வெற்றிமாறன் என்ற செல்வகுமார் என்ற ராஜ்குமார் புகார் அளித்து உள்ளார் . )
#வெற்றிமாறன் என்ற செல்வகுமார் என்ற ராஜ்குமார் என்ற நபர்  தம்மை ஒரு லெட்டர் பேட்  சாதி அமைப்பின் தலைவராக காட்டி கொண்டு ஊர் மக்களிடமும் சரி  சுற்று வட்டாரத்திலும் சரி  முடிந்த மட்டும் வசூல் செய்து கொண்டு   பிழைப்பை ஒட்டி கொண்டு இருந்தவர் . இவர் தீக்குளிப்பதற்கு   ஒரு மாதம் முன்னர் கூட ஊர் பொது மக்களிடம் , ஓய்வூதிய தொகை வாங்கி கொடுக்கிறேன் என்று  இருபத்து நான்கு பேரிடம் காசு வாங்கி பின்னர்  ஏமாற்றியவர் .
பக்கத்து ஊர் வானரமுட்டியில் , இப்படி காசு வாங்கி ஏமாற்றி அது பின்னர் பெரிய பிரச்சினையாக மாறிய நிகழ்வும் நடந்தது .
எப்போதும் போல அல்லது வழக்கம் போல அனைத்து  தேர்தலிலும்  போட்டி  இடுவதாக  பாவனை காட்டி கொண்டு  பின்னர் யாராவது ஒரு ஆளிடம்  பேரம் பேசி, படிந்தால்  காசு வாங்கி கொண்டு அரசியல் தொழிலை செய்பவர்தான்  இந்த வெற்றி மாறன் என்ற செல்வகுமார் என்ற ராஜ்குமார் . இவரது உண்மையான நோக்கம் எப்போதும் அரசியல் பணிகள் கிடையாது இவர் எப்படி பட்ட நபர் என்பதை அவரது தெரு ஆட்களிடம் அவரது சொந்த காரர்களை  விசாரித்தால்  கூட நன்கு  சொல்வார்கள் .
இன்றைக்கு பிரச்சினைக்கு உரியதாக மாறியதாக பிரச்சாரம் செய்யப்படும்   ஜமீன்தேவர்குளம் கிராம  பஞ்சாயத்து தேர்தலில் ,
அது பட்டியல் இனத்தவர்களிற்கு என்று மாறியவுடன்  ஊர் மக்கள் கூடி ஒன்றாக பேசி , தீக்குளித்து நாடகம் ஆடலாம் என்று நினைத்து ஆனால் அந்த  தீயிடம்  ஏமாந்து இறந்து போன வெற்றி மாறனின் சொந்தக்காரர் மல்லிகை ராசு என்பவரை அழைத்து உங்கள் தெருவில் ஒருவரை நீங்களே தேர்ந்து  எடுத்து  இந்த முறை தலைவராக வைத்து கொள்ளுங்கள் . ஆனால் அடுத்த முறை (ஐந்து வருடம் கழித்து )  வேறு ஒரு பட்டியல் இன  ஆட்களில் ஒருவருக்கு  ( இப்போது தலைவராக தெரிந்து எடுக்கப்பட்டுள்ள ராமசாமி சாதியினர் ) என்று விட்டு கொடுங்கள் ஊருக்குள் போட்டி இல்லாது போகும் என்று பேசுகையில் , மல்லிகைராசு  இந்த வெற்றி மாறனை குறிப்பிட்டே அந்த உறுதியை  எங்களால்   கொடுக்க இயலாது என்று கூறவும் சரி என்று தேர்தலுக்கு ஊர் தயாராகியது .
ஊரில் போட்டி இடுகின்ற யாரையும்- யாரும் தடுக்கவில்லை . இதில் எந்த சாதி விதர்ப்பமும் இல்லை ;  ஊரில் உள்ள அனைத்து சாதியினரும் சேர்ந்தே இப்போதைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பட்டியல் இன  தலைவர் ராமசாமியை முன் மொழிந்தார்கள் . வெற்றி மாறன் வசித்த தெருவுக்கும் தங்கவேல் என்ற அவரது சொந்தக்காரர் ஒருவரையே வார்டு உறுப்பினராகவும் தேர்ந்து எடுத்தார்கள் . இது அந்த ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு .
இந்த வெற்றி மாறன் என்ற நபர் எப்போதும் ஊர்காரர்களிற்க்கோ அல்லது அவரது தெரு ஆட்களிற்க்கோ எப்போதும் எதிலும் பொது விஷயத்தில்  உடன்பட்டவர் அல்ல . சென்னையில் அவரது  சில சாதி ஆட்களின் தொடர்புகளை வைத்து கொண்டு  ஊர்ப்பக்கம் வாழ்பவர்கள்  அறியாதவர்கள்,  அவர்களை இலகுவாக அரசியல்  ஏமாற்றி விடலாம் அல்லது அரற்றி விடலாம் என்ற எண்ணம் கொண்டு  அலைந்தவர் . அவரும் தேர்தலில் போட்டி இட விண்ணப்பத்தை தமது மனைவியோடு சேர்ந்து கொடுத்தார் .
கொடுத்தவர்  தீர்வை ரசீது கொடுக்கவில்லை . வரி நிலுவை இல்லை என்ற முக்கிய  சான்றிதழ் கொடுக்கவில்லை . தேர்தல் அலுவலர் இதை சுட்டி காட்டி ,  இருபத்தி நான்கு மணி நேர அவகாசமும் கொடுத்து வெற்றிமாறனை(குருவிகுளம் தேர்தல் நடத்தும் அதிகாரி) , அவைகளை எல்லாம் கொடுக்கும்படிக்கு கேட்கவும்  அவர் அவற்றை எதுவும் செய்யாமல்  இருந்து விட்டு , அவரது தேர்தல் மனுவை நிராகரிக்க அவரே காரணமாகி விட்டார் .  இருபத்தி நான்கு மணிநேரம் சென்றபின்னரும் மீண்டும் தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி மாறனுக்கு அழைத்து மேலும் நான்கைந்து மணி நேரம் அதிகம் அவகாசம் கொடுத்தும்  அவர் தேவைப்படும் படிவங்களை கொடுக்க தயாராக கூட இல்லை என்பதனால் அவர் வேறு வழி  இன்றி  வெற்றி மாறனின் தேர்தல் விண்ணப்பத்தை செல்லாது என அறிவித்தார் .
இதுதான் நடந்தது . இதில் இடைப்பட்ட நேரத்தில் , முன்னாள் ஊர் தலைவர் கமலாவின் கணவர் பாலகிருஷ்ணனிடம் , வெற்றி மாறன்  தாம் போட்டி  இட  விரும்பவில்லை என்றும் மாறாக  ஐந்து லக்ஷம் கொடுக்க வேண்டும் என்று பேரம்  பேசிய ஆடியோ  உள்ளது ( அதை பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் மக்கள் அனைத்து விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டார்கள் )
அதில் பாலகிருஷ்ணன்  நீங்கள் தேர்தலில் போட்டி இடுங்கள் , அல்லது இல்லாது செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் . அதில் நான் தலையிட முடியாது மேலும்  ராமசாமியை தேர்ந்து எடுத்ததும் ஊர் மக்கள்தான் தாம் தனிப்பட்ட நபர் அல்ல .  பல கடனில் இருக்கும்  நான் ஏன் உங்களிற்கு ஐந்து லக்ஷம் கொடுக்க வேண்டும். அது இயலாத காரியம்  நீங்கள் எதுவாக இருந்தாலும்  ராமசாமியிடம் பேசி கொள்ளுங்கள்,ஊர் மக்களிடம் பேசி கொள்ளுங்கள்   என்று பேசிவைகள் மிக தெளிவாக உள்ளது .
அந்த ஆடியோவை  கேட்கும் நபர்கள் அனைவரும் , வெற்றி மாறனுக்கு தேர்தலில் போட்டி இடும் எண்ணமே துளியும் இல்லை என்பதையும் ஆனால் போட்டி இடுவதாக ஊருக்கு  காட்டி கொண்டு, தனிப்பட்ட முறையில் கெஞ்சியோ அல்லது  அரட்டியோ அல்லது தயவு வார்த்தைகளை கொண்டோ  பேரம்  பேசி இந்த தேர்தலுக்கு  ஐந்து லக்ஷம் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணமே அவரினுள் நன்றாக இருந்ததை நன்கறியலாம் .
இப்படிப்பட்ட சூழலில் ,  ஊரில் இருந்து கிளம்பி  சென்னை வந்து , சென்னையில் முதல்வரின் வீட்டு முன்னர்  தீக்குளிப்பதாக ஒரு நாடகத்தை நடத்த விரும்பியவர்  ஏமாந்து அந்த தீக்கு இறையனார் .  தீப்புண் உடலுக்கு உடல் மாறுபட்டு நிற்கும் எழுபது சதவீதம் பாதித்து தப்பித்தவர்கள் உண்டு அதே நேரத்தில் முப்பது சதவீத பாதிப்பில் கூட உடல் தாளாமல்  உயிர் விட்டவர்களுக்கு உண்டு .  அப்படி ஒரு சம்பவம் அந்த கிராமத்தில்  ஒரு வருடத்திற்கு முன்னர் கூட நடந்தது . தனது அப்பாவை பயமுறுத்த என்று விளையாட்டு போல தன்னை தானே தீக்கிரையாக்கி கொண்டு பாலமுருகன் என்ற ஒரு திடகாத்திரமான இளைஞர் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் நடந்தது அதன் படிப்பினையை உணர்ந்தாவது வெற்றி மாறன் இந்த தீக்குளிப்பு என்ற முடிவை எடுக்காமல் இருந்து இருக்கலாம் .
வெற்றிமாறனின் தீக்குளிப்பு முடிவு எந்தவிதத்திலும் நியாயமான ஒன்று அல்ல . ஆனால் அது ஒரு தேவை அற்ற ஒரு அதீத கவன ஈர்ப்பு நடவடிக்கை என்று நினைத்து வெற்றி மாறன் தன்னை தானே ஏமாற்றி கொண்ட  கொடுமையான செயல் .
இறந்தவர்களை குறை சொல்லுவது கூடாது என்பது உண்மைதான் அதற்காக இறந்தவர்கள் சொல்லும் அனைத்து பொய்களும் உண்மையாகாது  என்பதை ஊருக்கு தெரியப்படுத்தவே இதை எழுத வேண்டிய கட்டாயம் வந்து உள்ளது .
#ஜமீன்தேவர்குளம்
கிராமத்தை பற்றி அதன் முன் நிர்வாகத்தை பற்றி பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகள்
 #ஜமீன்தேவர்குளம்
https://www.facebook.com/.../a.420417614.../884786578226143/
https://www.hindutamil.in/news/tamilnadu/86183-20.html

 May be an image of text that says 'பெருமாள்சாமி சுப்புராஜ் Pinned post பெருமாள்சாமி சுப்புராஜ் 14h முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்தவர் இறந்து விட்டார். முதல்வரின் பாராமுகம்? என்றெல்லாம் செய்திகளை இணையத்தில் பார்க்கிறோம். தமக்கு தெரிந்த சில தவறான செய்திகளை வைத்து கொண்டு சில அரைகுறை விற்பன்னர்கள் செய்திகளை இங்கே பதிந்து வருகிறார்கள். முதலில் ஜமீன் தேவர்குளம் கிராமத்தில் நடந்தது என்ன?'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக