ஞாயிறு, 3 அக்டோபர், 2021

மம்தா பானர்ஜியின் பவானிபூர் இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

 மாலைமலர் : மம்தா பானர்ஜி போட்டியிடுட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
கொல்கத்தா:   மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.
அதற்கேற்ப பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.


பவானிபூர் இடைத்தேர்தல்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பவானிபூர் தொகுதியில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மற்ற இரண்டு தொகுதிகளிலும் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக