சனி, 9 அக்டோபர், 2021

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மூன்று அதிஷ்டசாலிகளுக்கு 40 இன்ச் எல்.இ.டி டி.வி...மாவட்ட நிர்வாகம் முடிவு!

 40-inch LED TV for corona vaccinators ... District administration decides!

நக்கீரன் - ராஜ்ப்ரியன்  :   40-inch LED TV for corona vaccinators ... District administration decides!
கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன.
வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வடக்கு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கியே உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கென பரிசுகள், பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டுவருகின்றன.


அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் ஊசிபோட்டுக்கொள்ளும் நபர்களில் மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூன்று டிவிகளும் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளன.
இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா கூறும்போது, ''மெகா தடுப்பூசி முகாம்மில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை குலுக்கல் முறையில் மூன்று  நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த டிவி வழங்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக