வெள்ளி, 15 அக்டோபர், 2021

என் தந்தை உட்பட 28 ஆண்கள் என்னுடன் வன்புணர்வு கொண்டுள்ளனர்.. பகுஜன் . சமாஜ்வாதி அரசியல்வாதிகள் உட்பட ... உத்தர பிரதேசம் 17 வயது பெண்.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu : மேலும், ஒருமுறை அந்த பெண் தன் மாமா வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கே அவரது உறவினர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு கட்டத்தில் அவளுடைய மாமா அவளை சிலருக்கு விற்க முயன்றார், ஆனால் அவள் அங்கிருந்து தப்பித்த தாகவும் காவல் துறையிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லலித்பூர் எஸ்பி நிகில் பதக் கூறுகையில் 'இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக வழக்கு. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
தனக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்திற்கு முழு காரணம் தனது தந்தைதான் என அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் லலித்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் அடங்குவதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். 

கடந்த சில வருடங்களாக தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகவும் அதில் அந்த பெண் கூறியுள்ளார். அந்த சிறுமியின் புகார் மீது லலித்பூர் போலீசார் 28 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில் சிறுமியின் தந்தை, சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் திலக் யாதவ், அக்கட்சி நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தீபக் அகிர்வர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மீது ஐபிசி 354, 376-டி, 323 மற்றும் 506 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


காவல் நிலையத்தில் அந்த சிறுமி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பா எனக்கு ஆபாச படங்களை காட்டினார். அதே நேரத்தில் அவர் பாலியல் ரீதியாக அடிபணிய முயன்றார். ஆனால் நான் அதை கடுமையாக எதிர்த்தேன். பின்னர் ஒரு நாள் அவர் எனக்கு புதிய ஆடைகளைக் கொண்டு வந்து என்னை பைக்கில் அழைத்துச் சென்றார். ஆளில்லாத பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது .. அங்கு நான் பலாத்காரம் செய்யப்பட்டேன்உறுதி. இதை யாரிடமாவது சொன்னால் .. அவர் எங்கள் தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருப்பார். சில நாட்கள் கழித்து அவர் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவர் சிற்றுண்டி சாப்பிட அங்கு செல்வதாக கூறினார். எனக்கு குளிர் பானத்தில் ஏதோ ஒன்றை கலந்து குடிக்க கொடுத்தார். பின்னர் அவர் என்னை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தார். அந்த பெண் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு என்னை தனியாக விட்டுவிட்டார்.

சிறிது நேரத்தில் ஒரு ஆள் அங்கு வந்தார், அப்போது மெல்ல நான் சுயநினைவை இழந்தேன். பின்னர் நான் சுயநினைவுக்கு வந்தபோது என் உடைகள் கலைந்திருந்தது எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதன் பிறகும் அது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மனிதர் என்னை மனிதாபிமானமற்ற முறையில் ஹோட்டல் அறைகளில் பாலியல் பலாத்காரம் செய்வது வாடிக்கையானது. இதை யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என தொடர்ந்து என் தந்தையால் நான் எச்சரிக்கப்பட்டேன். சில நாட்களுக்கு முன்னர் திலக் யாதவ் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டார். பின்னர் திலக், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எங்கள் உறவினர்கள் என என்னை அதேபோன்று 28 பேர் வன்புணர்வு செய்து சித்திரவதை செய்தனர் ”என்று அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

மேலும், ஒருமுறை அந்த பெண் தன் மாமா வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கே அவரது உறவினர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு கட்டத்தில் அவளுடைய மாமா அவளை சிலருக்கு விற்க முயன்றார், ஆனால் அவள் அங்கிருந்து தப்பித்த தாகவும் காவல் துறையிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லலித்பூர் எஸ்பி நிகில் பதக் கூறுகையில் 'இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக வழக்கு. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரிவு 161 இன் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை பிரிவு 164 இன் கீழ் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவளது அறிக்கையை பதிவு செய்துள்ளோம். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்ற எஸ்பி நிகில், பாதிக்கப்பட்டவரின் தந்தை ஒரு லாரி கிளீனர் என்றும், தாங்கள்அவரை விசாரிப்பதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக